»   »  பாக்ஸ் ஆபீஸில் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி.. பேய் வசூல்!

பாக்ஸ் ஆபீஸில் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி.. பேய் வசூல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்ஸ் ஆபீஸில் காஞ்சனா 2 மற்றும் ஓ காதல் கண்மணி ஆகிய இரு படங்களும் தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி வருகின்றனவாம்.

இரு படங்களையும் மாறி மாறி ரசிகர்கள் ரசித்துப் பார்க்க தியேட்டர்களில் திரளுவதால் இரு படங்களின் யூனிட்டாரும் மகிழ்ச்சியுடன் உள்ளனராம்.


வசூல் கண்மணி...

வசூல் கண்மணி...

மணிரத்தினத்திற்கு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருப்திகரமான படமாக கண்மணி அமைந்துள்ளது. துல்கர் சல்மான், நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள இப்படம் முதல் நான்கு நாட்களில் ரூ. 14.3 கோடியை வசூலித்துள்ளதாம்.


கடலில் தத்தளித்த மணி...

கடலில் தத்தளித்த மணி...

அவரது கடைசி 2 படங்களான ராவணன் மற்றும் கடல் இரண்டும் அட்டர் பிளாப் படங்களாகும். ஆனால் அதற்கு நேர் மாறாக கண்மணி அமைந்துள்ளது.


மீண்டும் பார்முக்கு வந்தார்...

மீண்டும் பார்முக்கு வந்தார்...

மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக மணி திரும்பி வந்துள்ள படம் கண்மணி என்று அனைவரும் சிலாகிக்கின்றனர். படத்தை விரும்பியும் பார்க்கின்றனர் - சர்ச்சைக்குரிய கதையாக இருந்தாலும் கூட.


காஞ்சனா 2...

காஞ்சனா 2...

இருப்பினும் காஞ்சனா 2 தான் மிகப் பெரிய வசூல் மழையை கொடுத்துள்ளதாம். ராகவா லாரன்ஸின் இப்படம் தமிழகம் தவிர கேரளா, கர்நாடகாவிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறதாம்.


பேய் வசூல்...

பேய் வசூல்...

தமிழகத்தில் ரிலீஸான முதல் 2 நாட்களிலேயே இது ரூ. 10.83 கோடியை ஈட்டி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.


காமெடி கலந்த பேய்ப்படம்...

காமெடி கலந்த பேய்ப்படம்...

காமெடியும் திகிலும் கலந்த பேய்ப் படமான இப்படம் காஞ்சனா படத்தின் 2ம் பாகமாகும். டாப்சி, நித்யா மேனன், கோவை சரளா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.


English summary
The month of April has brought great cheer to the Tamil Movie industry as ‘Komban’ and ‘Nanbenda’ opened during the first weekend and brought in the moola. The trend has continued two weeks later with the April 17 releases ‘Kanchana 2’ and ‘OK Kanmani’.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil