»   »  கேரவனுக்குள் காஞ்சனா பேய்!

கேரவனுக்குள் காஞ்சனா பேய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது.

'முனி', 'காஞ்சனா', 'காஞ்சனா 2' ஆகிய பேய் படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் வசூலை அள்ளினார் லாரன்ஸ். தானே அப்படங்களில் நாயகனாக நடித்து, பேய் படங்களை மக்கள் ரசிக்கும்படி இயக்கினார்.

தற்போது 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளார் லாரன்ஸ். இதிலும் தானே நாயகனாக நடித்து, இயக்கி வருகிறார்.

ஓவியாவும் இருக்கிறார்

ஓவியாவும் இருக்கிறார்

இப்படத்திற்காக ஓவியா, வேதிகா மற்றும் நிகிதா என மூன்று நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக வெற்றி பணிபுரிந்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ்

கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்டோரும் 'காஞ்சனா 3' படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

ட்விட்டரில் போட்டோ

தமிழில் தனது அடுத்த படமான 'காஞ்சனா 3' ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக கேரவனை போட்டோ எடுத்து ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ளார் நடிகை வேதிகா.

முனிக்கு பிறகு

'முனி' படத்துக்கு அப்புறம் ஒரு மாஸ் கம்-பேக்கா இருக்கப் போகுது. உங்களை ராகவா லாரன்ஸுடன் படத்தில் பார்க்கக் காத்துட்டு இருக்கோம்.

நமக்கு மட்டும்தானா

காஞ்சனானு நினைச்சுக்கிட்டு கேரவனை பார்த்தாலே பேய் பங்களா மாதிரி தெரியுதே... நமக்கு மட்டும்தானா?

ஓவியா இருக்காங்களா

ஓவியா அங்க இருக்காங்களா... ப்ளீஸ் சொல்லுங்க மேடம். ஓவியா கூட ஒரு செல்ஃபி எடுத்து அப்லோடு பண்ணுங்க!

English summary
Raghava Lawrence's 'Kanchana 3' shooting is going on. Oviya, Vedhika and Nikitha have been signed in this film . The pic was shot by vedhika in the film's shoot and posted on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil