Just In
- 36 min ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 1 hr ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 2 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 2 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- Automobiles
2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான்! குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!
- Lifestyle
மைதா போண்டா
- News
உமாசங்கர் மரணத்தில் உள்ள மர்மம் என்ன...சிபிசிஐடி விசாரணை வேணும்...ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை
- Sports
பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.. பயிற்சி இல்லை.. தல மீது கோபத்தில் இருக்கும் சீனியர் தலைகள்!
- Finance
பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மன ரீதியான தாக்குதல்.. பாலியல் மற்றும் கொலை மிரட்டல் வருகிறது.. பிரபல நடிகை பகீர் புகார்!
மும்பை: விவசாய போராட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பதால் தனக்கு பாலியல் மற்றும் கொலை மிரட்டில் வருவதாக நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள், டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் கலந்துகொள்ள பில்கிஸ் பானு என்ற மூதாட்டி கடந்த 1 ஆம் தேதி வந்தார். அவரை போலீசார் தடுத்தனர்.

ஷாகீன் பாக் மூதாட்டி
இந்த மூதாட்டி, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தில் கலந்து கொண்டவர். அவர் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகை கங்கனா, ரூ.100 கொடுத்து அவரை இந்த போராட்டத்துக்கு அழைத்து வந்துள்ளனர் என்பது போல கூறியிருந்தார்.

குருத்வாரா கமிட்டி
இதற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு வாரத்திற்குள் கங்கனா இதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று டில்லி சீக்கிய குருத்வாரா கமிட்டி நோட்டீஸ் அனுப்பியது. கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தனது பதிவை கங்கனா நீக்கினார். கங்கனா கருத்துக்கு பஞ்சாப் பாடகரும், நடிகருமான திலிஜித் தோசான்ஜ் கண்டனம் தெரிவித்தார்.

உணர்வு ரீதியான
இதைத் தொடர்ந்து அவருக்கும் கங்கனாவுக்கும் ட்விட்டரில் மோதல் முற்றியது. இந்த விவகாரம் பற்றி தனது ட்விட்டரில், நடிகை கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களாக உணர்வு ரீதியான, மன ரீதியான தாக்குதல்களை சந்தித்து வருகிறேன்.

சந்தேகம் இல்லை
பாலியல் மற்றும் கொலை மிரட்டல்களும் வருகின்றன. எல்லா இயக்கங்களும் அரசியல் நோக்கம் கொண்டவை என்பதில் சந்தேகம் இல்லை. அதில் பயங்கரவாதிகளும் பங்கேற்கத் தொடங்கி இருக்கின்றனர். நான் என் பள்ளிப்படிப்பை பஞ்சாபில்தான் முடித்தேன். அங்குதான் வளர்ந்தேன்.

பஞ்சாப் மூதாட்டி
அங்குள்ள 90 சதவிகிதம் பேர், காலிஸ்தானை விரும்பவில்லை. அவர்கள் நாட்டைப் பிரிக்க விரும்பவில்லை. ஷாகீன் பாக் மூதாட்டி, படிக்கவோ, எழுதவோ தெரியவில்லை என்றாலும் தனது குடியுரிமைக்காக போராடுகிறார். ஒரு பஞ்சாப் மூதாட்டி எனக்கு எதிராக மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.

திலிஜித் தோசான்ஜ்
இந்த நாட்டில் என்ன நடக்கிறது? ஒவ்வொரு நாளும் நான் என் நோக்கத்துக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் நான் நாட்டுப்பற்று உடையவள். ஆனால், நடிகர் திலிஜித் தோசான்ஜ், பிரியங்கா சோப்ரா போன்றோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களை யாருமே கேள்வி கேட்பதில்லையே ஏன்? இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.