கங்கனா ரனாவத்துக்கு டெங்கு காய்ச்சல்.. எமர்ஜென்ஸி நேரத்திலும் எமர்ஜென்ஸி சூட்டிங்கை கைவிடவில்லை!

மும்பை: சமீபத்தில் அப்படியே இந்திரா காந்தியை போலவே மாறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நடிகை கங்கனா ரனாவத்.

எமர்ஜென்ஸி படத்தில் இந்திரா காந்தியாக நடித்து வரும் கங்கனா ரனாவத்துக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.

டிபி மாற்றிய கங்கனா

டிபி மாற்றிய கங்கனா

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சையான ட்வீட்களை போட்டு வந்த நிலையில், ட்விட்டர் அவரது கணக்கை அதிரடியாக நீக்கி அவரை வெளியே அனுப்பியது. உடனடியாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக ஆரம்பித்த கங்கனா ரனாவத், பிரதமர் மோடியின் அறிவிப்பை ஏற்று தனது போட்டோவை நீக்கி விட்டு இன்ஸ்டாகிராமில் தேசிய கொடியை புரொஃபைல் பிக்சராக வைத்துள்ளார்.

தேசப்பற்று

தேசப்பற்று

நடிகை கங்கனா ரனாவத்துக்கு இயல்பாகவே தேசிப்பற்று அதிகம் தான். ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு படத்தை மணிகர்ணிகா என இயக்கி நடித்து அசத்தினார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தலைவி எனும் தலைப்பில் சமீபத்தில் நடித்திருந்த கங்கனா ரனாவத், அடுத்ததாக இந்திரா காந்தியாக நடித்து வருகிறார்.

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல்

இந்திரா காந்தியாக எமர்ஜென்ஸி எனும் டைட்டிலில் உருவாகி வரும் படத்தில் ஓய்வின்றி உழைத்து வந்த நடிகை கங்கனா ரனாவத்துக்கு திடீரென டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். சீக்கிரம் டெங்குவில் இருந்து குணமாக ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

டெங்குவுடன் நடிக்கிறார்

டெங்குவுடன் நடிக்கிறார்

ஆனால், டெங்கு காய்ச்சலிலும் தனது எமர்ஜென்ஸி படத்தின் படப்பிடிப்பை நிறுத்தவில்லை என தொடர்ந்து நடித்து வருகிறேன் என அவர் பதிவிட்டு இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. முன்னதாக கொரோனா பாதிப்புக்கும் உள்ளாகி இருந்தார் கங்கனா ரனாவத் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வியில் இருந்து மீள

தோல்வியில் இருந்து மீள

கங்கனா ரனாவத் நடித்த தலைவி படம் மற்றும் சமீபத்தில் அவர் 80 கோடி பட்ஜெட்டில் இந்தியில் நடித்த தாக்கத் என இரு படங்களுமே சரியாக போகவில்லை. தாகத் படம் படு தோல்வி அடைந்த நிலையில், கங்கனா ரனாவத் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில், தோல்வியில் இருந்து மீள உடல் நலம் சரியில்லாத நிலையிலும் நடித்து வரும் கங்கனா ரனாவத், எப்படியாவது எமர்ஜென்ஸி படத்தின் மூலம் ஹிட் கொடுக்க வேண்டும் என முனைப்பாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X