»   »  படப்பிடிப்பில் காயம்: பிரபல நடிகைக்கு நெற்றியில் 15 தையல்

படப்பிடிப்பில் காயம்: பிரபல நடிகைக்கு நெற்றியில் 15 தையல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சண்டைக் காட்சியில் நடித்தபோது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு காயம் ஏற்பட்டு நெற்றியில் 15 தையல் போடப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்று படமான மணிகர்னிகாவில் ராணியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கங்கனா ஆக்ரோஷமாக சண்டை போடும் காட்சிகள் உள்ளன.

அப்படிப்பட்ட சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தபோது கங்கனாவுக்கு காயம் ஏற்பட்டது.

சண்டை

சண்டை

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. நிஹார் பாண்டியா, கங்கனா கலந்து கொண்ட வாள் சண்டைக் காட்சியை படமாக்கினார்கள்.

காயம்

காயம்

நிஹார் பாண்டியா வாளை வீச அப்போது கங்கனா அதில் இருந்து தப்ப வேண்டும். ஆனால் வாள் கங்கனாவின் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டது. காயம் பெரிய அளவில் இருந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவமனை

மருத்துவமனை

உடனே கங்கனாவை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஐசிசியு பிரிவில் அனுமதிக்கப்பட்ட கங்கனாவுக்கு நெற்றியில் 15 தையல் போடப்பட்டுள்ளது.

ஓய்வு

ஓய்வு

தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் கங்கனா அடுத்தவாரம் டிஸ்சார்ஜ் செய்யப்படுவாராம். அதன் பிறகு அவர் 3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கங்கனா

கங்கனா

ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வரும் கங்கனா சண்டைக் காட்சிகளில் டூப் வைத்துக் கொள்ள ஒப்புக் கொள்வதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kangana Ranaut suffered a major injury as she was hit by a sword during an intense sword-fighting scene, while shooting for her upcoming Rani Lakshmibai biopic.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil