For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அரசியல்வாதி பற்றிய கருத்துக்கு மிரட்டல்..? கங்கனா வீட்டில் துப்பாக்கிச் சூடு.. போலீசார் குவிப்பு!

  By
  |

  மணாலி: அரசியல் வாதி பற்றி கருத்துச் சொன்னதற்காக சிலர் துப்பாக்கியால் சுட்டு மிரட்டி உள்ளனர் என்று நடிகை கங்கனா ரனவத் தெரிவித்துள்ளார்.

  தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்தவர், பிரபல இந்தி நடிகை கங்கனா ரனவத்.

  இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார். இதை விஜய் இயக்குகிறார்.

  பயமா..? வனிதாவை லைவுக்கு கூப்பிட்டேன்.. மாட்டேன்னு சொல்லிட்டாப்ல.. நடிகை கஸ்தூரி பரபர போஸ்ட்!

  தேசிய விருதுகள்

  தேசிய விருதுகள்

  இந்தி சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதுகளை பெற்றவர் கங்கனா. இவர் எதையும் வெளிப்படையாக பேசி வருபவர். இதனால் இவரும் இவர் சகோதரி ரங்கோலியும் சர்ச்சைகளில் சிக்குவதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாவதும் வழக்கம். பலமுறை அப்படி நடந்திருக்கிறது.

  சினிமா வாரிசுகள்

  சினிமா வாரிசுகள்

  இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பாலிவுட்டில் நெபோடிசம் பற்றிய விவாதம் தொடங்கி இருக்கிறது. திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைதளங்களுக்கே சென்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து, கடுமையாக விளாசினர்.

  துப்பாக்கிச் சூடு

  துப்பாக்கிச் சூடு

  நடிகை கங்கனாவும் இந்த விஷயத்தில் வெளிப்படையாகப் பல பரபரப்பு கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இயக்குனர் கரண் ஜோஹர் உள்ளிட்ட சிலரையும் சாடி இருந்தார். தற்போது மணாலியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார் கங்கனா. இந்நிலையில் இவர் வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதாகவும் இரண்டு முறை துப்பாக்கிக் குண்டு சத்தத்தைத் தான் கேட்டதாகவும் தன்னை மிரட்ட சிலர் இப்படி செய்துள்ளதாகவும் அவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

  விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  இதுபற்றி கங்கனா கூறியிருப்பதாவது: இரவு 11.30 மணி இருக்கும். எனது அறையில் இருந்தேன். அதற்கு நேர் எதிராக இரண்டு முறை துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டது. 8 செகண்ட் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன. வீட்டு காம்பவுன்ட் சுவருக்குப் பின்னால் நின்று யாரோ சுட்டிருக்கிறார்கள். அதன் பின்பக்கம் காடு. அதனால் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம். இது எனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று நினைக்கிறேன்.

  இனி பேசாதே

  இனி பேசாதே

  கடந்த சில நாட்களுக்கு முதலமைச்சர் மகன் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தேன். அதற்கான மிரட்டல் இது என்று நினைக்கிறேன். இனி பேசாதே என்பதற்கான எச்சரிக்கை. இதற்கு முன் இங்கு இப்படியொரு சத்தம் கேட்டதே இல்லை. இதற்கு சாட்சியாக நானே இருக்கிறேன். சத்தம் கேட்டதும் செக்யூரிட்டியிடம் சொல்லி பார்க்கச் சொன்னேன். அவர் பார்த்தார். ஆனால், யாரும் இல்லை.

  அரசியல்வாதி

  அரசியல்வாதி

  உள்ளூர்க்காரர் யாரையாவது 7 ஆயிரம் 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து இந்த மிரட்டல் ஏற்பாட்டை அவர்கள் செய்திருக்கலாம். அந்த அரசியல்வாதி பற்றி கருத்துச் சொன்னதுமே, இனி மும்பையில் உங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்துவார்கள் என்று என்னிடம் சொன்னார்கள். நான் இப்போது மும்பையில் இல்லை என்பதால், மணாலியில் இதை செய்திருக்கிறார்கள். நடிகர் சுஷாந்த் சிங் இப்படித்தான் பயந்திருக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பேன். இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.

  Sushant இறப்பை பயன்படுத்தும் Kangana • Tapsee Strong Reply
  தற்கொலை அல்ல

  தற்கொலை அல்ல

  இந்த துப்பாக்கிக் குண்டு சத்தம் குறித்து போலீசில் புகார் அளித்ததை அடுத்து குளு போலீசார் கங்கனா வீட்டருகே சோதனை நடத்தினர். பின்னர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கங்கனாவின் டீம், கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்ட்ரா முதல்வர் பற்றியும் அவர் மகன் பற்றியும் கரண் ஜோஹர் பற்றியும் பரபரப்பு கருத்துத் தெரிவித்திருந்தது. அப்போது, 'நான் என் வீட்டில் தூக்குப் போட்டு இறந்தால், அது தற்கொலை அல்ல என்று தெரிந்துகொள்ளுங்கள்' என்றும் கூறியிருந்தார்.

  English summary
  After reported gunshots, police deploy security at Kangana Ranaut's Manali home.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X