twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ரிவால்வர் ராணி' கங்கணாவை தடுத்து நிறுத்திய சம்பல் கொள்ளையர்கள்

    By Mayura Akilan
    |

    மும்பை ரிவால்வர் ராணி என்ற படத்தில் நடித்து வரும் கங்கணா ரனவத், படப்பிடிப்புக்காக சம்பல் பள்ளத்தாக்குக்குப் போனபோது அங்கு நிஜமான கொள்ளையர்களை சந்திக்க நேரிட்டது.

    ரிவால்வர்ராணி படத்தை சாய் கபீர் இயக்குகிறார். படப்பிடிப்பை, கொள்ளையர் பூமியான சம்பல் பள்ளத்தாக்கில் வைத்திருந்தார் இயக்குநர்.நாயகி கங்கணா உள்பட படப்பிடிப்புக் குழுவினர் இதற்காகஅங்கு சென்றனர்.

    படப்படிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் குவாலியர் திரும்பியபோதுதான் கொள்ளையர்களிடம் சிக்கினர்.

    கத்தி-துப்பாக்கியுடன் 15 பேர்

    கத்தி-துப்பாக்கியுடன் 15 பேர்

    கங்கணா உள்ளிட்டோர் 5 கார்கள் மற்றும் ஒரு போலீஸ் வேனுடன் குவாலியர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது 12 முதல் 15 பேர் அடங்கிய கும்பல் அவர்களை வழிமறித்தது.

    பயங்கரக் கொள்ளையர்கள்

    பயங்கரக் கொள்ளையர்கள்

    அவர்கள் அனைவருமே பயங்கரக்கொள்ளையர்களாம். கையில் கத்தி,துப்பாக்கியுடன் கடூரமாக காணப்பட்டனர்.

    போஸ் கேட்டு அடம்

    போஸ் கேட்டு அடம்

    அவர்களின் கோரிக்கை என்னவென்றால் கங்கணா ரனவத் காரை விட்டு இறங்க வேண்டும். அவருடன் தாங்கள் நின்று போட்டோ எடுக்கவேண்டும் என்பதாகும்.

    சமரசம் பேசி அனுப்பினர்

    சமரசம் பேசி அனுப்பினர்

    ஆனால் இயக்குர் கபீர் அந்தப்பகுதியைச்சேர்ந்தவர் என்பதால் காரை விட்டு இறங்கி கொள்ளையர்களுடன் பேசினார். கொள்ளையர்களிடம் சமரசம்பேசி கலைந்துபோகச்செய்தார்.

    போஸ் தரவில்லை

    போஸ் தரவில்லை

    பின்னர் கபீர் கூறுகையில், எனக்கு இப்பகுதி நன்றாகத்தெரியும். மிகவும் நைச்சியாக பேசி தப்பினோம். கங்கணா கொள்ளையர்களை சந்திக்கவும் இல்லை, போட்டோவுக்குப் போஸ் தரவும் இல்லை என்றார்.

    துணைக்கு வந்த எம்.எல்.ஏ

    துணைக்கு வந்த எம்.எல்.ஏ

    இருந்தாலும் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக தனது நண்பரான எம்.எல்.ஏ. ராகேஷ் சதுர்த்தியின் உதவியை நாடியுள்ளார் இயக்குநர் கபீர். அவரும் தனது அடியாட்களுடன் அங்குவந்தார்.பின்னர்தனது ஆட்களை படக்குழுவினருடன் குவாலியர் வரை அனுப்பிவைத்தாராம் சதுர்த்தி.

    English summary
    Kangana Ranaut, who was shooting in the Chambal Valley for her next film, Revolver Rani, almost had an encounter with the dacoits that the area is (in)famous for. The actress was returning to Gwalior with the film's director, Sai Kabir, and the crew in a convoy of about four-five cars and a police van, when they were stopped by about 12-15 men armed with guns and knives, says our source.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X