பயோபிக்கை இயக்கி, நடிக்கும் கங்கனா...யாருடையது தெரியுமா ?

மும்பை : வரிசையாக பயோபிக் படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார் கங்கனா ரணாவத். அந்த கேரக்டர்களுக்கு ஏற்ற மாதிரி தனது உடல் தோற்றத்தையும் மாற்றி, கேரக்டரில் அச்சு அசல் தோற்றத்தை கொண்டு வர கடுமையாகவும் உழைத்து வருகிறார்.

ஜான்சி ராணியின் கதையை சொல்லும் மணிகர்னிகா படத்தை தொடர்ந்து சமீபத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார் கங்கனா. இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

நானே இயக்க போகிறேன்

நானே இயக்க போகிறேன்

2 மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்த படத்தை தானே இயக்கி, நடிக்க போவதாக தற்போது அறிவித்துள்ளார் கங்கனா. இதற்கு முன் மணிகர்னிகா படத்தையும் கங்கனா தான் இயக்கி, நடித்திருந்தார். இந்திரா காந்தியின் வாழ்க்கை படத்திற்கு எமர்ஜென்சி என பெயரிடப்பட்டுள்ளது.

மீண்டும் இயக்குனர் அவதாரம்

மீண்டும் இயக்குனர் அவதாரம்

இது பற்றி சோஷியல் மீடியாவில் கங்கனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீண்டும் இயக்குனராக போகிறேன். எமர்ஜென்சி படத்திற்காக ஓராண்டிற்கும் மேலாக பணியாற்றிய பிறகு, இறுதியாக நானே இயக்குவதாக முடிவு செய்துள்ளேன்.

என்னை தவிர யாராலும் முடியாது

என்னை தவிர யாராலும் முடியாது

என்னை தவிர வேறு யாரும் இதை சிறப்பாக இயக்க முடியாது. ரிதிஷ் ஷா, இந்த படத்திற்கு கதை எழுத போகிறார். இந்த படத்திற்காக நான் மேற்கொண்ட ஆய்வு மிகப் பெரியது. இதற்காக பல பட வாய்ப்புக்களை நான் தியாகம் செய்துள்ளேன். இது மிக முக்கியமான பயணம். எமர்ஜென்சி இந்திரா மூலம் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறேன்.

அரசியல் படமாக எமர்ஜென்சி

அரசியல் படமாக எமர்ஜென்சி

இதனை வாழ்க்கை படமாக எடுப்பதை தாண்டி அரசியல் படமாக எடுக்க நினைக்கிறேன். இது இந்திரா காந்தியின் வாழ்க்கை படம் மட்டுமல்ல. இது மிகப் பெரிய காலம் சார்ந்த படம். இந்த அரசியல் படம் என்னுடைய தலைமுறை, தற்போதைய இந்தியாவின் சமூக - அரசியல் வளத்தை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X