Don't Miss!
- News
கைக்குழந்தைக்கு "தனி டிக்கெட்" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத் ரோல் இதுதானா? லீக்கான தகவல்.. ஒருவேள இருக்குமோ!
சென்னை: சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த தகவல்களும் காத்து வாக்கில் கசிந்துள்ளன.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, நாசர், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் சந்திரமுகி.
மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய அந்த படத்தின் 2ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வருகிறார்.
பார்த்தியை விட்டு தூரமாக போகச்சொல்லும் மாமியார்.. தவிப்பில் காவ்யா!

காஞ்சனா சீரிஸ்
முனி படத்தில் ஆரம்பித்து காஞ்சனா, காஞ்சனா 2, 3 என பேய் படங்களை மக்கள் ரசிக்கும்படி காமெடி கலந்து ராகவா லாரன்ஸ் கொடுத்து ஹிட் ஆக்கிய நிலையில், சந்திரமுகி 2ம் பாகத்திலும் அவரே ஹீரோவாகி உள்ளார். சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி ஹீரோவாக நடித்த நிலையில், இந்த படத்தில் ரஜினி நடித்த சரவணன் கதாபாத்திரத்தின் சிஷ்யனாக ராகவா லாரன்ஸ் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோயின் யாரு
சந்திரமுகி என்கிற டைட்டிலேயே ஹீரோயின் பேஸ்ட் சப்ஜெக்ட் தான். முதல் பாகத்தில் ஜோதிகா நடித்து மிரட்டிய நிலையில், 2ம் பாகத்தில் சந்திரமுகியாக யார் நடிக்கப் போகிறார்? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில், கங்கனா ரனாவத் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இன்னமும் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.

தலைவியை தொடர்ந்து
பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றன. கடைசியாக தமிழில் தலைவி படத்தில் ஜெயலலிதா பயோபிக்கில் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தில் அவரை நடிக்க வைக்க படக்குழு தீவிர பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

என்ன ரோல்
சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத் என்ன கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல்களும் தற்போது கசிந்துள்ளன. பீரியட் போர்ஷனில் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடிக்கப் போகிறார் என்றும் அவருக்கு பெரிய சம்பளம் அதற்காக பேசப்பட்டு இருப்பதாகவும் அதிரடி தகவல்கள் பரவி வருகின்றன.

6 கோடி சம்பளம்
சந்திரமுகி 2 படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் நடிப்பதற்காக கங்கனா ரனாவத்துக்கு லைகா நிறுவனம் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் தர தயாராக இருப்பதாகவும், கங்கனா ரனாவத் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் எதிர்பார்ப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கூடிய விரைவிலேயே கங்கனா ரனாவத் ஆன்போர்ட் என்கிற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த தீபாவளி
சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் என்றும் சிஜி உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு ஆயுத பூஜை அல்லது தீபாவளிக்கு படத்தை வெளியிட இயக்குநர் பி. வாசு மற்றும் தயாரிப்பு நிறுவனமான லைகா முடிவு செய்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கன்ஃபார்ம் ஹிட்
சந்திரமுகி படத்தை போலவே சந்திரமுகி 2 படமும் கன்ஃபார்ம் ஹிட் அடிக்கும் சப்ஜெக்ட் தான் என்கின்றனர். முதலில் அனுஷ்காவைத் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்ததாகவும், அவர் ஓகே சொல்லாத நிலையில், தான் தற்போது கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறுகின்றனர்.