பொன்மகள் வந்தாள் படத்தைத் தொடர்ந்து.. 'தலைவி'யும் ஓடிடி-யில் வெளியாகிறதா? என்ன சொல்கிறார் கங்கனா?

By

சென்னை: தலைவி படம் ஓடிடியில் வெளியாகிறதா என்பது பற்றிய கேள்விக்கு நடிகை கங்கனா ரனாவத் பதிலளித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை, தலைவி என்ற பெயரில் சினிமாவாக்கப்பட்டு வருகிறது.

விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக, இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமார்

ஜி.வி.பிரகாஷ்குமார்

எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

இந்தப் படத்தை இந்த மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். இதுபற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான, பிருந்தா பிரசாத் அறிவித்திருந்தார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன், வெளியிடப்பட்டது. அதில் நடிகை கங்கனாவின் தோற்றத்தை ரசிகர்கள் விமர்சித்திருந்தனர்.

அரவிந்த்சாமி

அரவிந்த்சாமி

பின்னர் 'எம்ஜிஆர் லுக்' போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் அரவிந்த்சாமி, எம்.ஜி.ஆர் போலவே இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறினர். ஸ்பெஷல் டீசர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. அதிலும் அரவிந்த் சாமியின் தோற்றம் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறினர். இந்த போஸ்டர் அப்போது டிரெண்டானது.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

இந்நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக, சில படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம், அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்து கீர்த்தி சுரேஷ் நடித்து பெண்குயின் உட்பட சில படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன.

Recommended Video

Jothika Exclusive Interview | Ponmagal Vandhal • JJ Fedrick
வெளியிட முடியாது

வெளியிட முடியாது

இதற்கிடையே தலைவி படம் ஓடிடி-யில் வெளியிடப்படுமா என்பது பற்றி கங்கனா ரனாவத் கூறியிருப்பதாவது: தலைவி போன்ற ஒரு படத்தை டிஜிட்டலில் வெளியிட முடியாது. ஏனென்றால் இது பெரிய படம். மணிகர்ணிகா போன்ற படத்தையும் டிஜிட்டலில் வெளியிட முடியாது. ஆனால், நான் நடித்த பங்கா, ஜட்ஜ்மென்டல் ஹே கியா போன்ற படங்கள் டிஜிட்டல் ரசிகர்களுக்கான படமாகவும் இருக்கின்றன' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X