»   »  இன்று வெளியாகும் படங்கள் கங்காரு, யூகன்

இன்று வெளியாகும் படங்கள் கங்காரு, யூகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று வெள்ளிக்கிழமை இரு புதிய படங்கள் வெளியாகின்றன. அவை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள கங்காரு, முற்றிலும் புதியவர்கள் களமிறங்கியுள்ள யூகன்.

வெள்ளிக்கிழமைகளில் வழக்கமாக ஐந்தாறு படங்கள் வெளியாகும். ஆனால் இந்த வெள்ளியன்று இரண்டு படங்கள்தான்.


கங்காரு

கங்காரு

கங்காரு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சாமி இயக்கியுள்ளார். அர்ஜுனா, ப்ரியங்கா, வர்ஷா, தம்பி ராமையா, ஆர் சுந்தர்ராஜன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சீனிவாஸ் இசையமைத்துள்ளார்.


பாசம்

பாசம்

அண்ணன் தங்கை பாசத்தை வேறொரு கோணத்தில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் சாமி. இதுவரை பாலியல் ரீதியான சர்ச்சைகளைக் கிளப்பும் படங்களாக எடுத்தவர், முதல் முறையாக சுத்தமான படம் எடுத்திருக்கிறாராம்.


சிக்கல்கள்

சிக்கல்கள்

படத்துக்கு கடைசி வரை ஏகப்பட்ட தொல்லைகள். ஒரு பக்கம் தயாரிப்பாளர் சங்கம், பெப்சி, மறுபக்கம் தடை கோரி வழக்கு... இத்தனைச் சிக்கல்களுக்கும் மத்தியில் இந்தப் படம் இன்று வெற்றிகரமாக வெளியாகிவிட்டது.


யூகன்

யூகன்

புதியவர் கமல்குமார் .ஜி தயாரித்து, படத் தொகுப்பு செய்து இயக்கியுள்ள படம் ‘யூகன்'. இந்தப் படத்தில் யஷ்மித், சாக்ஷி அகர்வால், சித்து ஜிஆர்என், ஷியாம் கீர்த்திவாசன், பிரதீப் பாலாஜி, ஆயிஷா, தருண் சக்கரவர்த்தி, சுரேஷ் பிள்ளை, மனோஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


English summary
Today Friday there are only 2 movies Kangaroo and Yoogan releasing.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil