»   »  'திரில்லர் + பொழுதுபோக்கு' ரெண்டுக்குமே கியாரண்டி.. "கணிதன்" அதர்வாவைப் பாராட்டும் ரசிகர்கள்

'திரில்லர் + பொழுதுபோக்கு' ரெண்டுக்குமே கியாரண்டி.. "கணிதன்" அதர்வாவைப் பாராட்டும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதர்வா, கேத்தரின் தெரசா, மனோபாலா, தருண் ஆரோரா, பாக்யராஜ், கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் கணிதன்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் டி.என்.சந்தோஷ் இயக்கியிருக்கும் இப்படம், பத்திரிக்கை நிருபர்களின் சாகசங்களை விளக்கும் விதமாக அமைந்துள்ளது.


இப்படத்தின் இடையில் தெறி டீசரை இணைத்திருப்பதால், விஜய் ரசிகர்களின் ஆதரவும் கணிதனுக்கு கிடைத்துள்ளது.


டிரம்ஸ் சிவமணி இசையில், 450க்கும் அதிகமான திரையரங்குகளில், வெளியாகியிருக்கும் கணிதன் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதைப் பார்க்கலாம்.


திரில்லர் + பொழுதுபோக்கு

"இப்போதுதான் கணிதன் பார்த்தேன். திரில்லர் + பொழுதுபோக்கு இரண்டுமே உள்ளது. வாழ்த்துக்கள்" என்று பாராட்டியிருக்கிறார் ஈழவன்.


விஜய் ரசிகர்கள்

இயக்குநர் டி.என்.சந்தோஷ் விஜய்யின் வெறித்தனமான ரசிகர் மேலும் துப்பாக்கி படத்தின் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர். அதனால் கணிதன் படம் இளைய தளபதி ரசிகர்களுக்கு ஒரு விசேஷமான படம் என்று கூறியிருக்கிறார் பாபு முத்துராஜ்.


தேவையற்ற பாடல்களுடன்

"தேவையற்ற 2 பாடல்களுடன் நீண்ட முதல் பாதி முடிந்தது. பின்னணி இசை அருமை" என்று நிறைகுறைகளைக் கூறியிருக்கிறார் தெறி ரெங்கார்.


ரசிகர் மன்றம்

அதர்வாவின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட சிவா அதர்வாவுக்கு பேசாம ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமா? என்று கேட்டிருக்கிறார்.


வசனங்கள்

படத்தின் வசனங்களைக் குறிப்பிட்டு கணிதனைப் பாராட்டி இருக்கிறார் பழனி கண்ணன்.


இது போன்று ரசிகர்கள் பலரும் கணிதன் நன்றாக இருக்கிறது என, சமூக வலைதளங்களில் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.English summary
Atharvaa, Catherine Tresa Starrer Kanithan Released Today Worldwide, Written & Directed by T.N.Santhosh - Live Audience Response.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil