»   »  மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கா..? ஆள விட்றா சாமி... தெறித்து ஓடும் கஞ்சா கருப்பு!

மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கா..? ஆள விட்றா சாமி... தெறித்து ஓடும் கஞ்சா கருப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில கேரக்டர்களை சில நடிகர்கள் செய்தால்தான் நன்றாக இருக்கும்... எடுபடும். நடிகர் கஞ்சா கருப்புவை அப்படி ஒரு நடிகராக உருவாக்கினார்கள் பாலாவும் அமீரும்.

ஆனால் இடையில் சொந்தப் படம், தவறான பழக்கங்கள் என திசை மாறிப் போன கருப்பு, இப்போது மீண்டும் சரியான ட்ராக்குக்கு வந்திருக்கிறார். தொண்டன் படத்துக்குப் பிறகு பரபரவென நடிக்க ஆரம்பித்துள்ளார்.

Kanja Karupppu says no to Big Boss reentry

கொஞ்ச நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்தவர், இப்போது பரபரவென படங்களில் பிஸி.

இப்போது சந்தன தேவன், அருவா சண்ட, கிடா விருந்து உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு.. இவர் நடித்துள்ள 'குரங்கு பொம்மை' படம் இதோ இப்போது ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக 'பள்ளிப் பருவத்திலே' படம் ரிலீசாக இருக்கிறது.

சரி.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்களில் ஆர்த்தி, ஜூலி என ஒவ்வொருவராக சிலர் மீண்டும் உள்ளே போகிறார்களே.. கஞ்சா கருப்புவும் அப்படி மீண்டும் செல்வாரா என்று கேட்டால், "ஆளைவிடுங்கப்பா சாமி.. அது வேற ஏரியா.. கொஞ்சம் சூதானமாத்தான் நடந்துக்கணும்.. நமக்குலாம் அது செட்டாகதுப்பா," என சிம்பிளாக முடித்துக்கொள்கிறார்..

ஆமாம்.. பிக் பாஸ் ஷோவே ஒரு ஸ்கிரிப்ட்தான். அதன்படிதான் அங்குள்ளவர்கள் நடிக்கிறார்கள்.. நடந்து கொள்கிறார்கள் என சொல்லப்படுகிறதே என கேட்கும் முன்னே நம்மை மறித்து, "அதெல்லாம் சும்மா சொல்றவங்க எதுனா சொல்லுவாங்க பாஸ்.. அந்த வீட்டுக்குள்ளாற இருக்கிறவங்க அவங்கவங்க நடந்துக்கிறது எல்லாமே அவங்களா தீர்மானிக்கிறதுதான். ஸ்கிரிப்ட் நடிப்பா இருந்தா அடுத்த செகன்ட்லயே வெளிய தெரிஞ்சிருமே..," என்கிறார்.

ம்ம்.. ஆளு சூதானமாத்தான் இருக்காரு!

English summary
Kanja Karuppu says no to his reentry in Big Boss house

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X