ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்”.. அக்டோபர் 10 முதல் ஒளிபரப்பாகிறது!
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தனது புதிய தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் "வேடுவன்" சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 10 ந் தேதி வெளியாகி உள்ள இந்த வெப் தொடரில், கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ரம்யா ராமகிருஷ்ணா, ரேகா நாயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது வேடுவன் வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேடுவன் கதையில் சூரஜ் (கண்ணா ரவி) நடிகராக வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அவருக்கு "என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அருண்" என்ற போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தனது கேரியரை மீண்டும் உயிர்ப்பிக்க வந்த இந்த வாய்ப்பு, சூரஜை அருணின் ரகசியங்கள், சவாலான பணி, கடினமான முடிவுகள் ஆகியவை உலகத்திற்கு தெரியவருகிறது. சினிமா கதையுடன் நிஜ வாழ்க்கையும் கலக்கும் நிலையில், கடமை, காதல், நெறிமுறைகள் மூன்றும் மோதும் பரபரப்பான திரில்லராக இந்த கதை நகர்கிறது.

வேடுவன் வெப் தொடர்: இப்படத்தில் லீட் ரோலில் நடித்துள்ள நடிகர் கண்ணா ரவி , படம் குறித்து பேசுகையில், "வேடுவன் எனக்கு மிக நெருக்கமான படைப்பு இது ரீல் மற்றும் ரியல் கலந்த ஒரு வித்தியாசமான வாழ்க்கைப் பயணம். சூரஜ் கதாபாத்திரத்தில் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ஒரு நடிகனின் போராட்ட வாழ்க்கையை மட்டும் இல்லை, அருணின் சவால்கள், முடிவுகள், தியாகங்களை வாழ்ந்தது போன்ற உணர்வைத் தந்தது. கடமைக்கும், காதலுக்கும், மக்கள் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதை சொல்லும் கதை இது. ஒரு நடிகனாக, இது எனக்கு வித்தியாசமான சவாலை இருந்தது என்றார்.
சிந்திக்க வைக்கும் கதை: அதைத்தொடர்ந்து வெப்தொடரின் இயக்குநர் பவன் பேசுகையில், "வேடுவன் எனது கண்ணோட்டத்தில், காதல், கடமை, துரோகம் ஆகியவை மனித உணர்வுகளின் ஆழத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆழமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பெரிய விலை கொடுக்கிறார்கள். பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும், பார்வையாளர்கள் தங்களும் இத்தகைய சூழலில் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பும் கதையாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இப்படியான கதைக்கு துணிச்சலாக ஆதரவளித்த ZEE5-க்கு நன்றி என்றார்.
துணிச்சலான கதை: இதைத்தொடர்ந்து பேசிய ZEE5 தமிழ் & மலையாளம் பிஸினஸ் ஹெட் லாய்ட் C சேவியர், "வேடுவன் மூலம், வேர்களோடு பிணைந்த, துணிச்சலான, உணர்ச்சிப்பூர்வமான கதைகளை எங்கள் தமிழ் பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதில் மகிழ்ச்சியடைகிறோம். வலுவான நடிகர்கள், உணர்ச்சி மிக்க கதை, அருமையான விஷுவல் மூன்றும் இணைந்திருப்பதால், இது சாதாரண கதையாக இல்லாமல், ரசிகர்களுக்கு பிரத்தியேகமான அனுபவத்தை தரும். மனித உணர்வுகளின் உறுதியைப் பற்றிய சக்திவாய்ந்த கதையாக, பார்வையாளர்களுக்கு இனிமையான அனுபவம் தரும் என்று நம்புகிறோம் என்றார்.
ஜீ5 ஓடிடிதளத்தின் சிறப்பு: ZEE5 ஓடிடி இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் தென் ஆசிய உள்ளடக்கங்களுக்கான உலகளாவிய தளமாகும். இது190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்வையாளர்களை சென்றடைகிறது. ZEE எண்டர்டெயின்மென்ட் என்டர்ப்ரைசஸ் லிமிடெட் என்ற முன்னணி உள்ளடக்க மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஸ்ட்ரீமிங் தளமாக ZEE5 செயல்படுகிறது. ZEE5 மொழி முதன்மை அணுகுமுறையை முன்னெடுத்து, அதிகளவில் உள்ளூர் தன்மை கொண்ட கதைகள், மொழி அடிப்படையிலான பாக்கேஜ்கள் மற்றும் ஆழமான தனிப்பயனர் அனுபவங்களை வழங்குகிறது. தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய ஏழு மொழிகளில் சேவைகள் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











