கண்ணபிரான் Vs இன்பா... எதற்கும் துணிந்தவனில் சூர்யா ரோல் இது தானா?
சென்னை : எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாக இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் படம் பற்றிய அப்டேட்களை சன் பிக்சர்ஸ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தற்போது த்ரில்லிங்கான மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டி உள்ளது.
டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், வினய் ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் மார்ச் 11 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ள சூர்யாவின் முதல் பான் இந்தியன் படம் இது தான்.

ஆர்வத்தில் ரசிகர்கள்
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அதோடு இந்த படம் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாகக் கொண்டும், பெண்களுக்கு எதிராக குற்றங்களுக்கு எதிரான படம் என்றும் சொல்லப்படுவதால் இந்த படத்தின் கதை எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எதற்கும் துணிந்தவன் புக்கிங்
எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா வழக்கறிஞர் ரோலில் நடிக்கிறார் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஜெய்பீம் படத்திற்கு பிறகு சூர்யா மீண்டும் வழக்கறிஞர் ரோலில் நடித்துள்ள படம். மார்ச் 11 ம் தேதி காலை 5 மணிக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் புக்கிங் துவங்கி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளதால், இந்த படம் நிச்சயம் குடும்ப ஆடியன்ஸ்களை கவர்ந்து வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் ரோல் இது தானா
ரிலீஸ் தேதி நெருங்கி வருவதை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் சூர்யா, கண்ணபிரான் ரோலில் நடிக்கிறாராம். வில்லனாக நடிக்கும் வினய் ராய், இன்பா என்ற ரோலில் நடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கண்ணபிரான் Vs இன்பா...அல்டிமேட் மோதல் என குறிப்பிட்டு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. முதல் முறையாக சூர்யாவின் கேரக்டர் பெயர் வெளியிடப்பட்டுள்ளதால் சூர்யா ரசிகர்கள் இதை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

இப்பவே எல்லாத்தையும் சொல்லாதீங்கப்பா
சூர்யாவின் கண்ணபிரான் பெயரை பார்த்த ரசிகர்கள், கண்ணபிரானா...பேர பார்த்தா மகாபாரதம் referance போல இருக்கு. பாஞ்சாலியை காப்பாற்றும் கண்ணபிரானா. என்னப்பா ப்ரோமோலயே எல்லாத்தையும் வெளியிடுறீங்க. செம ஆக்ஷன் படமா இருக்கும் போலவே. போஸ்டரிலேயே மின்னல் தெறிக்குதே என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











