»   »  கால்வாய் ஆக்கிரமிப்பு: பிரபல கன்னட நடிகரின் வீட்டை இடிக்கும் பெங்களூர் மாநகராட்சி

கால்வாய் ஆக்கிரமிப்பு: பிரபல கன்னட நடிகரின் வீட்டை இடிக்கும் பெங்களூர் மாநகராட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் வீடு கால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் அதை இடித்து தள்ள பெங்களூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் ஐடியல் ஹோம் லே அவுட்டில் கன்னட நடிகர் தர்ஷனின் வீடு உள்ளது. மனைவியை அடித்து கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அதே நடிகர் தான்.

Kannada actor Darshan's house to be demolished

இந்நிலையில் தர்ஷனின் வீடு கால்வாய் நிலத்தில் 6 அடியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரின் வீட்டை இடிக்க பெங்களூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து தர்ஷனின் சகோதரர் தினகர் கூறுகையில்,

ஆக்கிரமிப்பு குறித்து மீடியாக்கள் மூலம் தெரிந்து கொண்டு மாநகராட்சி அதிகாரிகளை அணுகி பேசினோம். எங்கள் வீடு கால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், அது இடிக்கப்படும் என்றும் கூறினர்.

மாநகராட்சி அதிகாரிகள் வீட்டின் ஒரு பகுதியை இடிப்பதில் தர்ஷனுக்கு ஆட்சேபனை இல்லை. அவர் தற்போது படப்பிடிப்பில் உள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் தங்களின் வேலையை செய்யட்டும் என அவர் தெரிவித்தார் என்றார்.

Read more about: darshan, bbmp, தர்ஷன்
English summary
BBMP has reportedly decided to demolish a portion of Kannada actor Darshan's house in Bangalore in connection with encroachment issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil