வாழ்க்கையை தொடர விரும்பவில்லை.. எனக்கு விஷம் கொடுங்க.. நடிகர் கதறல்!
சென்னை: ரேணுகா சுவாமியை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் கன்னட நடிகர் தர்ஷன், இன்று வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரான போது, தற்போதைய சூழ்நிலையில், என்னால் உயிர் வாழவே முடியாது தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்கள், அதை குடித்துவிட்டு இறந்து விடுகிறேன் என கதறி அழுதுள்ளார்.
கன்னட திரைப்பட நடிகர் தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் மகனும் இருக்கும் நிலையில், அவர்களை விட்டு பிரிந்துவிட்டு, பவித்ரா கவுடாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பவித்ரா கவுடா பற்றி சமூக வலைதளத்தில் ரேணுகாசாமி என்கிற இளைஞர் மோசமாக கமெண்ட் செய்தது மட்டுமில்லாமல், ஆபாசமான போட்டோக்களை அனுப்பி இருந்தார். இதையடுத்து,ரேணுகா சுவாமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கன்னட நடிர் தர்ஷன்: இதனையடுத்து, போலீசார் ரேணுகா சுவாமி உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் நான்கு பேர் தானாக ஆஜராகி, பணத்திற்காக ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக கூறினர். ஆனால், ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசாருக்கு சந்தேகம் இருந்ததை அடுத்து, போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியதில், கன்னட நடிகர் தர்ஷன், அவரது மனைவி பவித்ரா கவுடா உள்பட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொடூரமான கொலை: ரேணுகா சுவாமி கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிக்கையில், ரேணுகா சுவாமியை, பவித்ரா காலணியால் மிதித்து துன்புறுத்தியதும், நக கருவியை பயன்படுத்தி,ரேணுகா சுவாமியின் ஆண் உறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி, விதைப்பைகளை அடித்து சிதைத்து, பல கொடுமைகளை செய்து ரேணுகா சுவாமியை கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொடூர கொலைக்கு காரணம், நடிகர் தர்ஷனின் ரசிகரான ரேணுகா சுவாமி, பவித்ராவிற்கு இன்ஸ்டாகிராமில், அவரை உடலுறுவுக்கு அழைத்ததும், ஆபாச அனுப்பியதும் காரணம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து, நடிகர் தர்ஷன், அவரது மனைவி பவித்ரா கவுடா உள்பட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விஷம் கொடுங்கள்: இதையடுத்து, தர்ஷன் உள்பட 7 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த ஜாமீனை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தர்ஷனின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டதை அடுத்து போலீசார் தர்ஷனை போலீசார் கைது சிறையில் அடித்தனர். தற்போது, தர்ஷன் சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் செய்யப்பட்டன. இதில், தனக்கு வீட்டு உணவை அனுமதிக்க வேண்டும் என்றும், பெங்களூர் சிறையில் இருந்து பல்லாரி சிறைக்கு மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது நடிகர் தர்ஷன் வீடியோ கான்பரன்சிங் வழியாக ஆஜரானார். அப்போது அவர், பல நாட்களாக சூரிய ஒளியை பார்க்கவில்லை எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது, தற்போதைய சூழ்நிலையில், என்னால் உயிர் வாழவே முடியாது தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்கள் அதை குடித்துவிட்டு இறந்து விடுகிறேன் என கதறி அழுதுள்ளார். இதைக்கேட்ட நீதிபதிகள் என்னிடம் இப்படி எல்லாம் பேசக்கூடாது, நான் உங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர சிறை கண்காணிப்பாளரிடம் கூறுகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











