»   »  குழந்தைகளை பள்ளியில் விடச்சென்ற வாரிசு நடிகருக்கு கத்திக்குத்து

குழந்தைகளை பள்ளியில் விடச்சென்ற வாரிசு நடிகருக்கு கத்திக்குத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட நடிகர் குரு ஜக்கேஷை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான ஜக்கேஷின் மகன் குரு. தந்தையை போன்றே குரு ஜக்கேஷும் நடிகர் ஆவார். திங்கட்கிழமை காலை குரு தனது குழந்தைகளை பள்ளியில் விட சென்றுள்ளார்.

Kannada actor Guru Jaggesh stabbed

பெங்களூர் ஆர்.டி. நகர் பகுதியில் யாரோ இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இதை பார்த்த குரு ஏம்பா வேகமாக செல்கிறாய் என்று கேட்டுள்ளார்.

Kannada actor Guru Jaggesh stabbed

அதற்கு அந்த நபர் ஆத்திரப்பட்டு குருவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து குருவின் தொடையில் குத்திவிட்டார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து குருவை மருத்துவமனையில் சேர்த்ததுடன் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

English summary
Miscreant stabbed Kannada actor Guru Jaggesh after the celebrity questioned him about speeding on a motorcycle.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil