»   »  மைக்கேல் மதன காமராஜனில் கலக்கிய சுதர்ஷன் மறைந்தார்!

மைக்கேல் மதன காமராஜனில் கலக்கிய சுதர்ஷன் மறைந்தார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்த பழம்பெரும் கன்னட நடிகர் ஆர்.என்.சுதர்ஷன் காலமானார். அவருக்கு வயது 78.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுதர்ஷன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

60 படங்களில் ஹீரோவாக நடித்தவர் பின்னர், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இதுவரை 250 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.

சினிமா குடும்பம் :

சினிமா குடும்பம் :

கர்நாடக மாநிலத்தில் 1939-ம் ஆண்டு மே 2-ம் தேதி பிறந்தவர் சுதர்ஷன். இவரது தந்தை ஆர்.நாகேந்திரா ராவ், கன்னட சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பிரபலமானவர். சுதர்ஷனின் சகோதர்களான ஆர்.என்.கிருஷ்ணா பிரசாத் மற்றும் ஆர்.என்.ராஜகோபால் ஆகியோரும் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னட ஹீரோ :

கன்னட ஹீரோ :

சினிமா குடும்பத்திலிருந்து வந்ததாலோ என்னவோ, சுதர்ஷனும் தனது 21-வது வயதில், நாகேந்திரா ராவ் இயக்கிய, 'விஜயநகரடா வீரபுத்ரா' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். சுமார் 60 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

குணச்சித்திர நடிகர் :

குணச்சித்திர நடிகர் :

ஹீரோ வாய்ப்புகளை இழந்தபின் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார் ஆர்.என்.சுதர்ஷன். தற்போது கன்னட தொலைக்காட்சி சீரியல் ஒன்றிலும் நடித்து வந்தார்.

தமிழில் :

தமிழில் :

தமிழில், 'தீர்ப்பு', 'சுமதி' 'என் சுந்தரி', 'நாயகன்', 'புன்னகை மன்னன்', 'பாயும் புலி', 'வேலைக்காரன்', 'ரமணா' உள்ளிட்ட பல படங்களிலும், பிற மொழிகளிலும் சேர்த்து சுமார் 250 படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் சுதர்ஷன்.

குடும்பம்

குடும்பம்

சுதர்ஷனுக்கு சைலாஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இவர் கன்னட சினிமாவின் முன்னாள் கதாநாயகி ஆவார். சைலாஸ்ரீ உடன் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார் சுதர்ஷன்.

English summary
The Veteran Kannada actor RN Sudarshan, who has acted in several language films including Tamil, has passed away.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil