»   »  நடிகை 'குத்து' ரம்யாவை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய பிரபல நடிகரின் மனைவி: திரையுலகில் பரபரப்பு

நடிகை 'குத்து' ரம்யாவை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய பிரபல நடிகரின் மனைவி: திரையுலகில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடிகை ரம்யாவை கண்டித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் பிரபல கன்னட நடிகர் கணேஷின் மனைவியும், பாஜக நிர்வாகியுமான ஷில்பா.

பிரபல கன்னட நடிகர் கணேஷின் மனைவி படங்களை தயாரித்து வருகிறார். கர்நாடக பாஜக மகளிர் அணியின் துணை தலைவியாக உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் நிர்வாகியான நடிகை ரம்யாவை ஃபேஸ்புக்கில் விளாசியுள்ளார் ஷில்பா.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விமர்சித்த ரம்யா குறித்து ஷில்பா ஃபேஸ்புக் போஸ்ட்டில் கூறியிருப்பதாவது,

ரம்யா

ரம்யா

மேடம் ரம்யா! நீங்கள் சோனியா மற்றும் ராகுலுக்கு செய்யும் சிறப்பான சேவையை தொடருங்கள். ஆனால் தயவு செய்து ராகுல் காந்தி போன்று பேசாதீர்கள்.

நிர்பயா

நிர்பயா

நிர்பயா பலாத்கார விவகாரத்தில் காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுத்ததாக கூறினீர்கள் ரம்யா. ஆனால் நிர்பயா விஷயத்தில் நடவடிக்கை எடுக்காததால் தான் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

உங்க கட்சி உறுப்பினர் ராஜராஜேஷ்வரிநகர் எம்.எல்.ஏ. முனிரத்னாவின் ஆதரவாளர்கள் ஜேடிஎஸ் கட்சி பெண் கவுன்சிலரின் சேலையை பிடித்து இழுத்தபோது எங்கிருந்தீர்கள்? உங்களின் கர்நாடக முதல்வர் இருந்த இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்தது என்று தெரியுமா? அந்த பெண் புகார் தெரிவித்ததும் அவரை கொலை செய்வேன் என்று முனிரத்னா மிரட்டியது உண்மையா?

முனிரத்னா

முனிரத்னா

முன்னதாக முனிரத்னா உங்கள் காங்கிரஸ் கட்சி பெண் கவுன்சிலரையே தாக்கியுள்ளார் என்று உங்களுக்கு தெரியுமா? முன்ரத்னா பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாக ஆஷா சுரேஷ் புகார் அளித்துள்ளார்.

அமைச்சர்

அமைச்சர்

பெண்களுடன் செக்ஸ் விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் மெட்டிக்கு எதிராக உங்கள் கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது மேடம்? உங்கள் கட்சியின் தலைவர் ஒரு பெண். அவருக்கு அமைச்சர்கள் இது போன்று இருந்தால் சரியா? நாட்டை பற்றி பேசும் முன்பு, உங்கள் கட்சியை பற்றி பேசுங்கள்.

பெண்கள்

பெண்கள்

முதலில் உங்கள் கட்சியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள். அதன் பிறகு மற்றவர்களை கிண்டல் செய்யலாம். உங்கள் ஆட்சியில் மத்திய அமைச்சரின் மனைவிக்கே(சுனந்தா புஷ்கர்) பாதுகாப்பு இல்லை. அதனால் பெண்கள் பாதுகாப்புக்கு காங்கிரஸின் பங்களிப்பு குறித்து நாட்டுக்கே தெரியும்.

விவசாயிகள்

விவசாயிகள்

விவசாயிகளுக்கு பாஜக அரசு நிதி அளிக்கவில்லை என்று கூறுகிறீர்கள் நீங்கள். மத்திய அரசிடம் இருந்து கர்நாடக அரசுக்கு ரூ. 28 ஆயிரத்து 750 கோடி கிடைத்துள்ளது என்று நிதி அமைச்சக ஆவணங்களில் உள்ளது. அந்த பணம் எல்லாம் எங்கே மேடம்?

ஆங்கிலம்

ஆங்கிலம்

மேடம், நீங்கள் ஆங்கிலத்தில் நன்றாக பேசுகிறீர்கள். ஆனால் கர்நாடாக மக்களுக்கு உங்களின் போலியான அமெரிக்க உச்சரிப்பு புரியவில்லை என்று விளாசியுள்ளார் ஷில்பா.

English summary
Kannada actor Ganesh's wife and State Vice President of BJP Mahila Morcha Shilpa has blasted actress cum congress functionary Ramya for criticising Modi government.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil