கடுப்பான சிவராஜ்குமார்.. படப்பிடிப்பின்போது ரசிகர்கள் கொடுத்த தொல்லை.. என்னங்க இப்படி கோபபடுறாரு?

சென்னை: கன்னட நடிகர் சிவராஜ்குமார் தற்போது மீண்டும் பரபரப்பான திரைப்படப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு நீண்ட ஓய்வெடுத்த அவர், தற்போது மீண்டும் படப்பிடிப்புகளில் சுறுசுறுப்பாக பங்கேற்று வருகிறார். அண்மையில், ஒரு படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிவராஜ்குமார் காரில் இருந்து இறங்கிய போது, ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். சில சமயங்களில் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கும் போது, அவர்களை அன்பாகவே கண்டிப்பது சிவராஜ்குமாரின் வழக்கம். இப்போதும் அதே போல அன்பாகவே கோபப்பட்டு, பின்னர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து சிலர் கமெண்ட் செய்தாலும், ரசிகர்கள் சிவராஜ்குமாருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். "பைரதி ரணகல்" படத்திற்குப் பிறகு சிவராஜ்குமார் கதாநாயகனாக நடித்த எந்தத் திரைப்படமும் வெளியாகவில்லை. இருப்பினும், "வீரச்சந்திரஹாஸ்" மற்றும் "ஃபயர்பிளை" போன்ற படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளார்.

உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டியுடன் இணைந்து நடித்துள்ள "45" திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தற்போது "உத்தரகாண்டா", "பெட்டி", "ஜெயிலர்-2", "666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்", "டேட்", "ஏ ஃபார் ஆனந்த்" போன்ற பல படங்களில் சிவராஜ்குமார் நடித்து வருகிறார். இந்த படங்கள் எல்லாம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டில் இரண்டு மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவராஜ்குமார் தனது எளிமையான மற்றும் நேர்மையான குணத்தால் கன்னட திரையுலகில் பெரும் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் அவர் விருப்பமான நடிகராக இருக்கிறார். நடிப்பதுடன், சமீப காலமாக திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். கீதா பிக்சர்ஸ் பேனரின் கீழ் "வேதா" மற்றும் "பைரதி ரணகல்" படங்களைத் தயாரித்துள்ளார். இதுவரை 125 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிவராஜ்குமார், இன்றும் அதிக வரவேற்பைப் பெற்ற நடிகராகத் திகழ்கிறார். 60 வயதைக் கடந்தாலும், அவரது சுறுசுறுப்பு என்பது மற்ற நடிகர்களில் இருந்து தனித்துவம் வாய்ந்தது.

Kannada Actor Shivaraj Kumar Angry At Shooting Spot Because Of Fans Behaviour
Photo Credit:

அடத்த ஆண்டு : பிறமொழி திரைப்பட இயக்குநர்களும் இவரைத் தேடி வந்து கதைகள் கூறுகிறார்கள். ஏற்கனவே, தமிழில் "ஜெயிலர்" மற்றும் "கேப்டன் மில்லர்" படங்களில் நடித்துள்ளார். தற்போது, தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார்.முன்னதாக, தெலுங்கில் "கவுதமிபுத்ர ஷாதகர்ணி" என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்போது, ராம் சரணுடன் இணைந்து ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 28 அன்று வெளியாக உள்ளது. புச்சிபாபு இயக்கும் இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

கோபம்: அண்மையில், ஒரு படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிவராஜ்குமார் காரில் இருந்து இறங்கிய போது, ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். சில சமயங்களில் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கும் போது, அவர்களை அன்பாகவே கண்டிப்பது சிவராஜ்குமாரின் வழக்கம். இப்போதும் அதே போல அன்பாகவே கோபப்பட்டு, பின்னர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X