»   »  'என்னை அறிந்தால்' படத்தை திரையிடும் தியேட்டர்களை கொளுத்துவேன்: கன்னட நடிகர் ஆவேசம்

'என்னை அறிந்தால்' படத்தை திரையிடும் தியேட்டர்களை கொளுத்துவேன்: கன்னட நடிகர் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தை திரையிடும் தியேட்டர்களை தீ வைத்து கொளுத்திவிட்டு சிறைக்கு செல்ல தயார் என கன்னட நடிகர் ஜக்கேஷ் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஹிட் படமான என்னை அறிந்தால் சத்யதேவ் ஐபிஎஸ் என்ற பெயரில் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு இன்று கர்நாடகாவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளதற்கு கன்னட திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜக்கேஷ்

ஜக்கேஷ்

டப் செய்யப்பட்ட அஜீத்தின் படத்தை கர்நாடகாவில் வெளியிட்டால் அந்த படம் ஓடும் தியேட்டர்களுக்கு தீ வைத்துவிட்டு சிறைக்கு செல்லவும் தயார் என்று கன்னட நடிகரும், அரசியல்வாதிகயுமான ஜக்கேஷ் தெரிவித்துள்ளார்.

வாட்டாள் நாகராஜ்

வாட்டாள் நாகராஜ்

பிற மொழி படங்களை தமிழில் டப் செய்வதை கண்டித்து வரும் வாரம் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக கன்னட சலுவாளிக் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

சிவராஜ்குமார்

சிவராஜ்குமார்

கன்னட திரையுலகின் முன்னணி ஹீரோவான சிவராஜ் குமாரும் டப்பிங் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டப்பிங் படங்களுக்கு எதிராக போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரிலீஸ்

ரிலீஸ்

கடும் எதிர்ப்புக்கு இடையே சத்யதேவ் ஐபிஎஸ் படம் இன்று கர்நாடகாவில் ரிலீஸாகியுள்ளது. எதிர்ப்பு காரணமாக பெங்களூரில் மட்டும் படத்தை ரிலீஸ் செய்யவில்லை. ஆனால் தியேட்டர் பற்றாக்குறையால் பெங்களூரில் ரிலீஸ் செய்யவில்லை என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Kannada actor Jaggesh said that he will torch the theatres that screen Kannada dubbed version of Ajith's ‘Yennai Arindhal'.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil