திருமணமாகாமலே கர்ப்பமான நடிகை.. பிறந்த சில நொடிகளில் குழந்தையை பறிகொடுத்த சோகம்!
சென்னை: கன்னட நடிகை பாவனா ரமண்ணா சந்திரமுகி பிரனாக்ஷி என்ற படத்தில் நடித்து புகழ்பெற்றர். தமிழில் மோகன் நடிப்பில் வெளியான அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் அறிமுகமாகி பிரசாந்தின் விரும்புகிறேன், நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாவனா ரமண்ணா, திருமணம் செய்யாமலே கர்ப்பமாகி குழந்தைக்கு தாயாகி உள்ளார். ஆனால், குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே உயிரிழந்துவிட சோகத்தில் அழுது புலம்பி உள்ளார்.
40 வாயதாகும் பாவனா ராமண்ணாவிற்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும், தாய்மையின் அழகை ரசிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதனால்,, ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தார். திருமணம் ஆகாததால் பல மருத்துவர்கள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பின் பல விஷயத்தை எடுத்து சொல்லி, பல மருத்துவமனைகள் ஏறி இறங்கிய பின், ஐவிஎஃப் சிகிச்சை அளிக்க மருத்துவர் ஒருவர் முன்வர, இரட்டை குழந்தைகளை சுமந்தார். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பாவனா ராமண்ணா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஒரு சோகமும் நிகழ்ந்தது, இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒன்று திடீரென உயிரிழந்தது.

கன்னட நடிகை பாவனா ராமண்ணா : இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், பாவனா ராமண்ணா தனது கர்ப்பகாலத்தின் ஏழாவது மாதத்தில் உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்தார். அதாவது, இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு உடல்நலக் குறைபாடுகள் இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். இதுவே, எட்டாவது மாதத்தில் குறைப்பிரசவத்திற்கு வழிவகுத்தது. இரட்டைக் குழந்தைகளில் ஒன்று மட்டுமே உயிர் பிழைத்தது. மற்றொரு குழந்தையும் பாவனாவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்தனர்.
இரட்டை பெண் குழந்தை: நடிகை பாவனா ராமண்ணா, தனது கர்ப்பம் குறித்த அறிவிப்பை ஜூலை மாதம் வெளியிட்டார். அதில், கடவுள் சிலைகளுக்கு அருகில் நின்று கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு புதிய அத்தியாயம், ஒரு புதிய தாளம். நான் இப்படிச் சொல்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், இப்போது நான் ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறேன். இரட்டைக் குழந்தைகளுடன், மிகுந்த நன்றியுடன் இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 20 மற்றும் 30 வயதில் தாய்மையைப் பற்றி யோசிக்காத பாவனாவுக்கு, 40 வயதில் தாய்மையடையும் ஆசை வந்துள்ளது.
தனி பெண்ணாக போராடினேன்: இதில், ஒற்றைப் பெண்ணாக இருந்ததால் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் பேசிய பாவனா, ஐவிஎஃப் சிகிச்சைக்காக பல கிளினிக்குகள் தன்னை நிராகரித்தன. ஆனால், டாக்டர் சுஷ்மா தன்னை ஏற்றுக்கொண்டு, எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் சிகிச்சையளித்தார். அவரின் ஆதரவுடன், எனது முதல் முயற்சியிலேயே நான் கர்ப்பமானேன். என் தந்தை, சகோதர, சகோதரிகள் மற்றும் அன்புக்குரியவர்கள் பெருமையுடனும் அன்புடனும் எனக்கு ஆதரவளித்தனர். சிலர் எனது தேர்வைப் பற்றி கேள்வி எழுப்பினர். ஆனால், என் இதயத்தில் நான் தயாராக இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும், என்று அவர் கூறினார். மேலும், தனது குழந்தைகளுக்கு ஒரு தந்தை இல்லாமல் போனாலும், என் வீடு "கலை, இசை, கலாச்சாரம் மற்றும் நிபந்தனையற்ற அன்பால்" நிரம்பியிருக்கும் என்றும் பாவனா நெகிழ்ச்சியுடன் கூறினார்.


Click it and Unblock the Notifications











