»   »  வேறொரு பெண்ணுடன் தொடர்பால் என்னைக் கொல்லப் பார்த்தார்.. - கணவர் மீது நடிகை புகார்!

வேறொரு பெண்ணுடன் தொடர்பால் என்னைக் கொல்லப் பார்த்தார்.. - கணவர் மீது நடிகை புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு : பிரபல கன்னட நடிகை சைத்ரா தனது கணவர் தன்னைக் கொல்ல முயன்றதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது வில்லி, குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் நடிகை சைத்ரா 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

வேறொரு பெண்ணுடன் தனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டிருப்பதால் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக புகாரில் கூறியிருக்கிறார் சைத்ரா.

சைத்ரா

சைத்ரா

நடிகை சைத்ரா ஹீரோயினாக சில கன்னட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது வில்லி மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார். சைத்ராவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலாஜி போத்ராவுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

புகார்

புகார்

சைத்ரா தனது கணவரோடும் இரண்டு குழந்தைகளோடும் வாழ்ந்துவந்த நிலையில், தற்போது தனது கணவர் மீது கொலை முயற்சி புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். புவனேஸ்வர் காவல் நிலையத்தில் அவர் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

கொடுமை

கொடுமை

"திருமணத்துக்கு பிறகு எனது கணவர் என்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினார். மோசமான வார்த்தைகளால் திட்டினார். கொடுமைப்படுத்தினார். நான் வெளியே செல்லும்போதெல்லாம் துப்பாக்கியுடன் அடியாட்களை என்னுடன் அனுப்பினார்.

கழுத்தை நெரித்து

கழுத்தை நெரித்து

என்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று தடுத்தார். அதனால் சில டெலிவிஷன் தொடர்கள் தயாரித்தேன். அதில் வந்த லாபத்தையும் பறித்துக்கொண்டார். சண்டைகளில் கழுத்தை பிடித்து நெரித்துக் கொலை செய்யவும் முயன்றார். அவர் தாக்கியதில் எனக்கு காயங்கள் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளேன்.

வேறொரு பெண்ணுடன் தொடர்பு

வேறொரு பெண்ணுடன் தொடர்பு

வேறொரு பெண்ணுடன் எனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டிருப்பதால் இப்படி எல்லாம் செய்கிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவரிடமிருந்து என்னை காப்பாற்ற வேண்டும்" என தனது மனுவில் சைத்ரா கூறியுள்ளார். புவனேஸ்வர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Kannada actress Chaitra complained against her husband. She accuses her husband of physical torture, files complaint.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X