»   »  கோவா பீச்சில் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஷமிகள்

கோவா பீச்சில் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஷமிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கோவாவுக்கு சென்ற இடத்தில் சிலர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கன்னட நடிகை நிவேதிதா தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகை நிவேதிதா கோவாவுக்கு சென்றுள்ளார். நான் முன்னால் செல்கிறேன் நீங்கள் இரண்டு நாட்கள் கழித்து வாங்க என்று அவர் தனது காதலரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நிவேதிதா கோவாவுக்கு தனியாக சென்றுள்ளார்.

கடற்கரை

கடற்கரை

இரண்டு நாட்கள் தனியாக இருக்க நினைத்து தான் நிவேதிதா முதலில் கோவா சென்றுள்ளார். அங்கு இரவு 9 மணிக்கு அவர் காத்து வாங்க கடற்கரைக்கு சென்றுள்ளார்.

கிண்டல்

கிண்டல்

கடற்கரையில் நடந்து சென்ற நடிகை நிவேதிதாவை பார்த்த சில ஆண்கள் அவரை பார்த்து அசிங்கமாக கமெண்ட் அடித்து சிரித்துள்ளனர். மேலும் சிலர் நிவேதிதா பயந்து போகும் அளவுக்கு அருகில் வந்துள்ளனர்.

பயம்

பயம்

சில ஆண்கள் தனக்கு மிகவும் அருகில் வந்ததும் பயந்து போன நிவேதிதா அருகில் இருந்த சிறு ஹோட்டலுக்குள் சென்றுள்ளார். அங்கு ஒரு டேபிளில் இருந்த ஆண்களும் அவரை கிண்டல் செய்து தங்களுடன் வந்து அமருமாறு கூறியுள்ளனர்.

சர்வர்

சர்வர்

மிகவும் பயந்து போன நிவேதிதா ஹோட்டல் சர்வரின் உதவியுடன் தான் தங்கிய இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் தனது காதலருக்கு போன் செய்து உடனே கோவா கிளம்பி வருமாறு கூறியுள்ளார்.

English summary
Kannada actress Nivedhitha was sexually harassed by a bunch of men in Goa where she went to relax after completing her latest movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil