»   »  நடிகை ஜெயந்தி திடீர் மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதி!

நடிகை ஜெயந்தி திடீர் மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகை ஜெயந்தி மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதி!

பெங்களுரு : பழம்பெரும் நடிகை ஜெயந்தி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் எம்.ஜி.ஆருடன் இணைந்து 'படகோட்டி', 'முகராசி' ஆகிய படங்களிலும், சிவாஜி கணேசனுடன் இணைந்து 'கர்ணன்', 'இருவர் உள்ளம்' உள்ளிட்ட சில படங்களிலும், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் ஆகிய ஹீரோக்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் 1945-ம் ஆண்டு பிறந்த நடிகை ஜெயந்தி கமலாகுமாரி ஜெயந்தி என்ற பெயருடன் சினிமாவில் நுழைந்தார். தனது முதல் கன்னட படமான ஜூனு கூடு என்ற படத்தை இயக்கிய பெக்கெட்டி சிவராமை திருமணம் செய்து கொண்டார்.

Kannada actress jayanthi hospitalized due to illness

ஹாலிவுட்டில் பிரவுன் நேஷன் என்ற சீரியலும் நடித்துள்ளார் ஜெயந்தி. கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு ஜோடியாக 45 படங்களில் நடித்துள்ளார். 'மிஸ் மாலினி' என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கையால் தேசிய விருதும், கர்நாடகா மாநில அரசின் தேசிய விருதும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், திடீர் மூச்சுத்திணறல் காரணமாக ஜெயந்தி, பெங்களூரில் இருக்கும் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 35 வருடங்களாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வரும் ஜெயந்திக்கு அவ்வப்போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுமாம். ஜெயந்திக்கு தற்போது வயது 73.

English summary
Kannada actress Jayanthi hospitalized with breathing problems in Bangalore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X