»   »  நடிகை ஜெயந்தி நலமாக இருக்கிறார்!

நடிகை ஜெயந்தி நலமாக இருக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகை ஜெயந்தி இறந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு!- வீடியோ

பெங்களூரு : பழம்பெரும் நடிகை ஜெயந்தி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் ஆகிய ஹீரோக்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார்.

73 வயதாகும் ஜெயந்தி, அதீத மூச்சுத் திணறலால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். கடந்த 35 ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Kannada actress jayanthi recovers from respiratory problems

தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. நாளை, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட இருக்கிறார். இதற்கிடையே அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவியது.

இந்தத் தகவலுக்கு ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வரும் விக்ரம் மருத்துவமனை நிர்வாகமும் அவர் இறந்ததாக வந்த செய்தியை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The legendary actress Jayanthi was admitted to a private hospital yesterday due to severe respiratory problems. There is good progress in her health now. Her son and hospital administration have denied the news of her death.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X