»   »  கமலைக் காப்பி அடிக்கப்போகும் கன்னட பிக்பாஸ்!

கமலைக் காப்பி அடிக்கப்போகும் கன்னட பிக்பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழில் விஜய் டி.வி நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். வார இறுதி நாட்களில் நிகழ்ச்சிக்கு வரும் கமலின் பேச்சுக்கும், அவரது கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கும் பலர் ரசிகர்களாக உள்ளனர். கமல் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள் சமூக வலைதளங்களிலும் மிகப் பிரபலமாகி வருகின்றன.

நிகழ்ச்சியின்போதே அவர் சமகால அரசியல் குறித்தும், ஊழல் அரசியல்வாதிகளைப் பற்றியும் பேசி வருகிறார். மக்களின் பிரச்னைகள் குறித்தும், மத்திய மாநில அரசுகள் குறித்தும் தைரியமாகப் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அரசியல் பார்வையாளர்களும் அந்நிகழ்ச்சியைக் கவனித்து வருகிறார்கள்.

'Kannada biggboss' is going to copy Kamal's style

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் நடத்தி வருகிறார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் 4-வது சீசன்களை நடிகர் சுதீப் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், கன்னட பிக்பாஸ் 5-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், கமல் தான் உண்மையான பிக்பாஸ் என்றும் கூறியுள்ளார் சுதீப். மேலும், கமலிடமிருந்து தான் கற்றுக்கொண்ட விஷயங்களை தான் தொகுத்து வழங்கப்போகும் ஐந்தாவது சீசனில் வெளிப்படுத்தப் போவதாகவும் சுதீப் தெரிவித்துள்ளார்.

English summary
Actor sudeep is going to host 'Kannada Bigboss season-5'. He told, 'Kamal is a real big boss, I'm going to follow his style'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil