»   »  ஓ.. இதுக்குப் பெயர்தான் கூட்டத்தோடு கோவிந்தா போடுவது என்பதா!

ஓ.. இதுக்குப் பெயர்தான் கூட்டத்தோடு கோவிந்தா போடுவது என்பதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பாகுபலி காய்ச்சலில் ஆந்திராவே மூழ்கிக் கிடக்கிறது. கர்நாடகத்திலும் இந்தக் காய்ச்சல் பெரிதாகவே உள்ளது. தமிழகத்திலும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் பாகுபலியை வைத்து கன்னடத் திரையுலகினர் காசு பார்க்க களம் குதித்துள்ளனர்.

பாகுபலி படத்தின் டிரெய்லரோடு தங்களது படத்தின் டிரெய்லரையும் சேர்த்து கோர்த்து விட்டு வருகின்றனர் சிலர். அதேபோல பாகுபலி திரையிடப்படும் தியேட்டர்களில் தங்களது படத்தின் டிரெய்லரையும் திரையிட்டு அதை பிரபலமாக்கவும் களம் குதித்துள்ளனராம்.

பாகுபலி

பாகுபலி

பாகுபலியில் கன்னட நடிகர் சுதீப்பும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தின் பாடல் உரிமை உள்ளிட்டவற்றையும் பெங்களூரைச் சேர்ந்த லஹரி நிறுவனம்தான் வாங்கியுள்ளது.

எதிர்பார்ப்பு அதிகம்

எதிர்பார்ப்பு அதிகம்

எனவே கர்நாடகத்தில் இப்படம் பிரமாதமாக ஓடும என்ற எதிர்பார்ப்பு ஏராளமாக உள்ளது. சுதீப்புக்காக ஒரு கூட்டம் வரும் என்றால் ராஜமெளலிக்காக பெரும் கூட்டம் திரளும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தியேட்டர்கள் ஹவுஸ்புல்

தியேட்டர்கள் ஹவுஸ்புல்

பல தியேட்டர்களில் பாகுபலி திரையிடப்படவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டர்களுக்கிடையே கடும் போட்டியும் நிலவுகிறது.

3 படங்களின் பலே ஐடியா

3 படங்களின் பலே ஐடியா

இந்த நிலையில் பாகுபலியை வைத்து தங்களது படத்தைப் பிரபலப்படுத்த 3 கன்னடப் படங்கள் களம் குதித்துள்ளனவாம். பாகுபலி படம் திரையிட்டப்படும் தியேட்டர்களில் விளம்பரம் போல தங்களது படத்தின் டிரெய்லர்களை இவர்கள் இணைத்து வருகின்றனராம்.

ஜெஸ்ஸி - தனகயோனு - பர்ஜாரி

ஜெஸ்ஸி - தனகயோனு - பர்ஜாரி

ஜெஸ்ஸி, தனகயோனு, பர்ஜாரி ஆகியவை அந்தப் படங்கள். இதில் தனகயோனு துனியா விஜய் நடித்த படம். பிரியா மணிதான் ஹீரோயின். தெலுங்கு ரசிகர்களுக்கு மத்தியில் இந்தக் கன்னடப் படங்களுக்கு எப்படி ஆதரவு கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
3 Kannada films have planned to use Baahubali craze to their business during the Telugu flick's relesae in Karnataka

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil