»   »  குசும் மீண்டும் கைது!!

குசும் மீண்டும் கைது!!

Subscribe to Oneindia Tamil


கன்னட பிரசாத் காதலி குசும் விபச்சார வழக்கில் கைது

Click here for more images
கன்னட பிரசாத்தின் காதலியான குசும் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் மாநிலங்களில் நடிகைகள், டிவி நடிகைகள் உள்ளிட்ட பெண்களின் மாபெரும் நெட்வோர்க்கை வைத்துக் கொண்டு மிகப் பெரிய விபச்சார புரோக்கராக செயல்பட்டு வந்தவர் கன்னட பிரசாத்.

பல ஆண்டுகளாக தனது செல்வாக்கால் தப்பி வந்த பிரசாத் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

அவரது காதலியான குசும் மற்றும் உதவியாளர்கள் பாரதிகண்ணன், குமார், சரவணன் ஆகியோர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் குசும் தான் பிரசாத்தின் வலதுகரமாக செயல்பட்டு வந்தார் என்பது உறுதியானது. பல தொழிலதிபர்களுடன் குசும் உல்லாசத்தில் இருந்த படங்களும் பிடிபட்டன.

கன்னட பிரசாத் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால், குசும் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார்.

கன்னட பிரசாத்துடன் சேர்ந்து பிடிபடுவதற்கு முன் ஆலந்தூரில் கார் ஒன்றில் விபசாரம் செய்தபோது குசும் சிக்கினார்.

அது தொடர்பாக குசும் மீது விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார் தனி வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால், அந்த வழக்கில் குசும் கைதாகவில்லை.

இந் நிலையில் பிரசாத்துடன் சேர்ந்து கைதாகி ஜாமீனில் வெளியே வந்துவிட்ட குசும் விபச்சார வழக்கில் கைதாகாமல் தப்ப தலைமறைவானார்.

அவரை போலீசார் தேடி வந்தனர். இந் நிலையில் புழல் சிறையில் இருக்கும் கன்னட பிரசாத்தை சந்திக்க குசும் அங்கு வர இருப்பதாக
விபசார தடுப்புப்பிரிவுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் இன்று குசுமை கைது செய்தனர். சிந்தாதரிப்பேட்டையில் உள்ள விபசாரத் தடுப்பு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இன்றே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

Read more about: arrested, kannada prasad
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil