Don't Miss!
- News
"சதுரங்க ஆட்டம்".. கமலாலய வாசற்படியில், அதிமுக புள்ளிகள் "வெயிட்டிங்".. நறுக்குனு சொன்ன தயாநிதி மாறன்
- Finance
90 நாளில் 4.65 லட்சம் கார் விற்பனை.. Maruti Suzuki நிறுவனத்தின் லாபம் 130% உயர்வு..!
- Sports
அவங்க நாடு மீது தான் விஸ்வாசம் இருக்கும்.. இந்தியா தோற்றதுக்கு காரணமே அது தான்.. கவாஸ்கர் தாக்கு
- Lifestyle
நீங்க 3, 12, 21 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவரா?அப்ப உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கு தெரியுமா?
- Automobiles
டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐயே தூக்கி சாப்பிட்ரும் போல... மைலேஜ் தருவதில் செம்ம கில்லாடி!
- Technology
iPhone கேமரா உடைந்தால் என்ன செய்வது? இது தெரியாம சர்வீஸ் கொடுத்தா பணம் போய்விடும்.!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
ஜெயிலர் பட நடிகர் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்தார்...எல்லாமே மாஸ்டர் பிளான் தான்!
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கும் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்துள்ளார்.
நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில், நானே வருவேன் படத்தில் நடித்திருந்தார். செப்டம்பர் மாதம் வெளியான இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
இந்த படத்தைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும், ஒரே நேரத்தில் தயாராகி வரும் வாத்தி திரைப்படம் டிசம்பர் 2ந் தேதி வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் அதன் பின்னர் எந்த அறிவிப்பும் வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இப்படித்தான்
கட்டிப்
பிடிக்கணும்..
மகனை
அரவணைத்த
ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்..
டிரெண்டாகும்
புகைப்படம்!

கேப்டன் மில்லர்
ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் அட்டகாசமான மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது அந்த போஸ்டரில் போராளியாக தனுஷை முகமூடி அணிந்து மோட்டார் பைக்கில் வரும் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது.

முன்னணி நடிகர்கள்
இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜீவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷின் தொடரி, பட்டாஸ், மாறன் படங்களை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தையும் தயாரித்துள்ளது.

இதுவரை திரையில் பார்க்காத கதை
1930ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் அட்வன்சர் படமாக தயாராக உள்ள இப்படம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே யாரும் தொடாத ஒரு கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முக்கிய கதாபாத்திரத்தில்
கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மறைந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சசோதரர் சிவராஜ்குமார் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளார். கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.