தனுஷுடன் இணையும் கன்னட டாப் ஹீரோ… கேப்டன் மில்லர் படத்தில் காத்திருக்கும் அல்டிமேட் அப்டேட்

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்

அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தென்காசி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

பீரியட் படமாக உருவாகும் 'கேப்டன் மில்லர்' படத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர் ஷூட்டிங்

கேப்டன் மில்லர் ஷூட்டிங்

தனுஷின் நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இதில், 'திருச்சிற்றம்பலம்' பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. இதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். ராக்கி, சாணிக்காயிதம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண்மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இணையும் சூப்பர் ஸ்டார்?

இணையும் சூப்பர் ஸ்டார்?

1980-களின் கதைக்களத்தில் பீரியட் திரைப்படமாக உருவாகும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு செப்டம்பர் 22ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து தென்காசியில் தொடங்கிய ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருவதாகவும், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தனுஷ், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன், குமரவேல் ஆகியோர் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

முதலில் ஜெயிலர்

முதலில் ஜெயிலர்

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக மிரட்டி வரும் சிவராஜ்குமார், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிவராஜ்குமாரின் தம்பியும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரஜினியுடன் 'ஜெயிலர்' படத்தில் நடிக்க சிவராஜ்குமார் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனாலும், இதுகுறித்து இன்னும் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக சிவராஜ்குமார் நடிப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் தனுஷுடன்

விரைவில் தனுஷுடன்

இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்ததும் தனுஷின் கேப்டன் மில்லரில் சிவராஜ்குமார் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவராஜ்குமார் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், தனுஷுடன் நடிப்பது மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ரஜினிகாந்தின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் என அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் சிவராஜ்குமார் கவனம் செலுத்துவது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X