»   »  கோவிலுக்கு சென்றபோது கார் விபத்து: டிவி நடிகர், நடிகை பலி

கோவிலுக்கு சென்றபோது கார் விபத்து: டிவி நடிகர், நடிகை பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ரச்சனா, நடிகர் ஜீவன் கார் விபத்தில் பலியாகியுள்ளனர்.

மகாநதி கன்னட தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தவர் ரச்சனா(23). அவர் தன்னுடன் அதே தொடரில் நடித்து வந்த ஜீவன்(25), கார்த்திக், ரஞ்சித், உத்தம், ஹோன்னேஷ், எரிக் ஆகியோர் டாடா சஃபாரி காரில் பெங்களூர் அருகே உள்ள குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சென்றனர்.

Netizens Slam Serial Actress For Posting Her Bikini Picture
கோவில்

கோவில்

கார்த்திக்கின் பிறந்தநாளையொட்டி அவர்கள் கோவிலுக்கு சென்றனர். காரை ஜீவன் ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணி அளவில் அவர்களின் கார் மகதி தாலுகாவில் உள்ள சோலூர் அருகே சென்று கொண்டிருந்தது.

விபத்து

விபத்து

கார் சாலையோரம் நின்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரச்சனா மற்றும் ஜீவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றவர்கள் காயம் அடைந்தனர்.

 மருத்துவமனை

மருத்துவமனை

காயம் அடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மும்பை

முன்னதாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அர்ஜித் லவானியா, ககன் காங் ஆகியோர் ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பும்போது மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் பலியாகினர்.

கார்த்திக்கிறகு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Television serial actress Rachana, who gained popularity for her roles in the serials like Mahanadi, Triveni Sangama and Madhu Bala, has died tragically in a car accident. Along with Rachana (23), her co-actor in various serials, Jeevan (25), also breathed his last.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil