»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களை 3 மாதங்கள் கழித்தே கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என்றகோரிக்கையை வலியுறுத்தி பெங்களூரில் கன்னடத் திரையுலகினர் இன்று பேரணி நடத்தினர்.

கர்நாடகத்தில் கன்னட மொழிப் படங்களை விட தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிப் படங்களே நன்றாகஓடுகின்றன. குறிப்பாக பெங்களூரில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழிப் படங்களுக்குத்தான் நல்ல மார்க்கெட்உள்ளது. ஆந்திர எல்லைப் பகுதி மாவட்டங்களில் தெலுங்குப் படங்களும், கேரள எல்லையை ஒட்டியமாவட்டங்களில் மலையாளப் படங்களுமே ஓடுகின்றன.

மைசூர், மாண்டியா உள்ளிட்ட உட்பகுதி கர்நாடகத்தில் மட்டுமே கன்னட படங்கள் ஓடுகின்றன. அவையும் தரக்குறைவான படங்களாக உள்ளதாக பரவலான புகார் உண்டு. சுமாராக ஓடுவதாலும், ஓட்டினாலும் லாபம் ஈட்டித்தருவதில்லை என்பதாலும் கன்னட படங்களுக்கு பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகர்களில் நல்ல தியேட்டர்கள்கிடைப்பதில்லை.

இது தவிர கன்னடப் படங்களில் பெரும்பாலானவை தமிழ், இந்தி, தெலுங்கு படங்களின் ரீமேக் உரிமையைவாங்கி எடுக்கப்படுபவையே. அதையும் சரியாக எடுக்காததால் அவை ஓடுவதில்லை. 40களில் வெளியான ரத்தக்கண்ணீர், 70களில் எடுத்த தங்கப் பதக்கம், 80களில் வந்த ஆண்பாவம் போன்ற படங்கள் இப்போது கன்னடத்தில்ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.

கன்னடக் கலைஞர்கள் தங்களது சொந்த சரக்கில் தயாரித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வாறுவெளிவரும் படங்களின் தரம் சொல்லும்படியாய் இருப்பதில்லை என்பதால் அவை வெற்றி பெறுவதும் இல்லை.இந்தப் படங்களுக்கு வரி கிடையாது. இதனால் டிக்கெட் விலை மிகக் குறைவாக இருந்தாலும் இந்தப் படங்களின்தரம் காரணமாக ஓடுவதில்லை.

கன்னட படங்கள் ஓடாததற்கு பிற மொழிப் படங்களைக் குறை கூறுவது இங்குள்ள கலைஞர்களின் வழக்கம். பிறமொழிப் படங்கள் காரணமாகத் தான் கன்னடப் படங்கள் ஓடுவதில்லை என்று கூறி கன்னட திரையுலகினர்அவ்வப்போது போராட்டத்தில் குதிப்பதுண்டு. இப்போதும் அது போன்ற போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பிற மொழிப் புதுப் படங்களை கர்நாடகத்தில் 3 மாதங்கள் கழித்தே திரையிட வேண்டும், பிற மொழிப்படங்களுக்கான வரியை 70 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதைவலியுறுத்தி கன்னடத் திரையுலகினர் இன்று போராட்டம் நடத்தினர்.

நடிகர்கள் ராஜ்குமார், அம்பரீஷ், ரவிச்சந்திரன், விஷ்ணுவர்த்தன், நடிகைகள் பிரேமா, ஜெயந்தி உள்ளிட்டபல்வேறு தரப்பினரும் கலந்து கொண்ட மாபெரும் பேரணியும் இந்த போராட்டத்தின்போது நடத்தப்பட்டது. இந்தஊர்வலத்தால் பெங்களூரில் பல இடங்களில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேரணி நடத்தப்பட்டது எல்லா பிற மொழிப் படங்களுக்கும் எதிராகத் தான் என்றாலும் முக்கியமாக டார்கெட்தமிழ்ப் படங்கள் தான் என்பது அனைவரும் அறிந்தததே.

Read more about: chennai cine industry cinema news

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil