»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களை அந்தந்த மாநிலங்களில் திரையிட்ட ஏழு வாரங்களுக்குப் பின்பு தான் கர்நாடகத்தில் திரையிடவேண்டும் என்பதை கன்னட திரையுலகினர் அமல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.


அவர்களது இந்தத் தடைக்கு, கமல் நடித்து இன்று வெளியான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். முதல் பலியாகியுள்ளது.

நடிகர் ராஜ்குமார் தலைமையில் பெங்களூரில் நடந்த கூட்டத்தில், பிறமொழிப் படங்களை 7 வாரங்களுக்குப் பின்புதான் கர்நாடகத்தில்திரையிட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி இன்று வெளியிடுவதாக இருந்த "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சரத்குமார் நடித்த"ஏய் படமும், விஜய் நடித்த "மதுர படமும், ஆகஸ்ட் 18ல் திரையிடப்படுவதாக இருந்த மகேஷ்பாபு நடித்த "அர்ஜூன் தெலுங்குப்படமும், 21ல் திரையிடுவதாக இருந்த பவன் கல்யாணின் "குடும்ப சங்கர் தெலுங்குப் படமும் ரிலீஸான 7வாரங்களுக்குப் பின்புதான்கர்நாடகத்தில் வெளியிடப்படவுள்ளன.

இதற்கு அந்த படங்களின் விநியோகஸ்தர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கே.ராஜன் வேண்டுகோள்:

இந் நிலையில், தமிழ் சினிமாவைக் காப்பாற்ற வேற்றுமைகளை மறந்து தமிழ் திரையுலகினர் ஒன்றுபட வேண்டும் என்று திரைப்படபாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் படம் வெளியான படத்தை ஏழு வாரம் கழித்து கர்நாடகத்தில் திரையிடுவதற்கு முன் திருட்டு வி.சி.டி. மூலமும் கேபிள்டி.வி மூலமும் எல்லா படங்களையும் கர்நாடகத்தில் வாழும் தமிழ் மக்கள் பார்த்து விடுவார்கள். இதனால் தமிழ்த் திரைப்படதயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். மேலும் கர்நாடக ஏரியாவே காலியாகிவிடும்.

கர்நாடகாவில் திரைப்படத் தொழில் வளர அந்த மாநில அரசு பல சலுகைகள் வழங்கியுள்ளது. இருப்பினும் வேற்று மொழிபடங்களை எதிர்த்து கன்னட நடிகர்கள் போராடுகிறார்கள். ஆனால், பல வழிகளில் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழ் சினிமாவைக்காப்பாற்ற யார் முன் வரப் போகிறார்கள்?


தமிழ் சினிமாவைக் காப்பாற்ற வேற்றுமைகளை மறந்து எல்லோரும் ஒன்றுபடுவோம். மக்களுக்கு பல சலுகைகளை வழங்கிவரும் தமிழக முதல்வரை சந்தித்து வேண்டுவோம்.

திருட்டு வி.சி.டி. கொள்ளையர்களைத் தண்டிக்க குண்டர் சட்டம் கொண்டுவரவேண்டும். சிறிய பட்ஜெட் படங்களைப் பாதுகாக்ககேளிக்கை வரியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும். பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த வசூலிக்கப்படும் கட்டணத்தைக்குறைக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதாதான் தமிழ்த்திரையுலகை காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

முக்தா சீனிவாசன் அறிக்கை:

தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னட திரையுலகினர் எடுத்துள்ள முடிவால், தமிழ்பட தயாரிப்பாளர்களுக்கு கர்நாடகத்திலிருந்து வரும் வருமானம் மிக மிக குறைந்துபோய்விடும். கர்நாடக ஏரியாவை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் முன் வரமாட்டார்கள்.

கர்நாடக தயாரிப்பாளர்களையும் உள்ளடக்கியதான் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. அதன் ஒரு கையான தமிழ் சினிமா துறைக்கு,இன்னொரு கையான கன்னட சினிமா மூலம் நஷ்டம் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு தீர்வு காண தென்னிந்தியதிரைப்பட வர்த்தக சபை ஆவண செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Read more about: chennai, cine field, cinema, news, tamil film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil