»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னட மன்மதராசாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கன்னட படங்களுக்கு எதிரி தமிழ் படங்கள் என்று கூறி, தமிழ் படங்கள் கர்நாடகாவில் வெளியிட கன்னடதிரையுலகம் ஏழு வார தடை விதித்தது. ஆனால் தமிழப் படங்களின் கதைகளையும், பாடல்களையும்காப்பியடிப்பதை கன்னட சினிமா விடவில்லை.

இதுவரை ரீமேக் உரிமை பெற்று படங்கள் தயாரித்து வந்தவர்கள், இப்போது பிறமொழி திரையுலகினருடன்ஏற்பட்ட மோதல் காரணமாக சுட ஆரம்பித்துவிட்டனர்.

இந்தியன் தியேட்டர்ஸ் கிருஷ்ணகாந்த் தயாரித்து தமிழில் சூப்பர் ஹிட்டான திருடா திருடி. படத்தில் தனுஷும்சாயாசிங்கும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் மாலதியும், சங்கர் மகாதேவனும் பாடிய மன்மத ராசா,தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் புகழ் பெற்றது.

இந்த பாடலை அப்படியே காப்பி அடித்து கலாசா பால்ய என்ற கன்னட படத்தில் பயன்படுத்தியுள்ளனர். மெட்டுமட்டுமல்லாமல், பாடல் வரிகளைக் கூட அப்படியே மொழிபெயர்த்துள்ளனர். இந்த பாடல் இப்போதுகன்னடத்தில் ஹிட்டாகி உள்ளது. இந்தப் படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகவுள்ளது.

இந் நிலையில், தனது அனுமதி இல்லாமல் பாடலை காப்பி அடித்து இருப்பதாக கிருஷ்ணகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமார் கன்னட பாடலை டேப்ரெக்கார்டரில் போட்டுக் கேட்டார்.

அப்போது காப்பி அடித்திருப்பது உறுதியானதால், பாடலை படத்தில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தார்.மேலும் இது தொடர்பாக கன்னட படத் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil