twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் திரையரங்குகளில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்... மற்ற படங்களும் ரீ-ரிலீஸாகின்றன!

    |

    சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது.

    மார்ச் மாத இறுதியில் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கிய ககொரானா தொற்றின் காரணமாக திரையரங்குகள் முற்றிலும் மூடப்பட்டன.

    இதனால் புதிதாக ரிலீஸான திரைப்படங்கள் ஓரிரு வாரங்களிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் இப்பொழுது, பல மாதங்களுக்குப் பிறகு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் திரையரங்குகள் திறக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் ரசிகர்களின் மனதை கவர்ந்த திரைப்படங்கள் இப்பொழுது திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

    திரையரங்குகளும் பாதிப்படைந்து

    திரையரங்குகளும் பாதிப்படைந்து

    இதுவரை இல்லாத அளவிற்கு 2020 ஆம் ஆண்டு மக்களை பாடாய் படுத்தி விட்டது. எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். இதில் பலருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இதில் திரையரங்குகளும் மிகவும் பாதிப்படைந்து இருந்தது.

    இயக்குனர் தேசிங் பெரியசாமி

    இயக்குனர் தேசிங் பெரியசாமி

    தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் புது புது இயக்குனர்கள் அருமையான கதைகளுடன் தொடர்ந்து அறிமுகம் ஆகிக் கொண்டிருக்கும் நிலையில் அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டதோடு ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்று வசூலையும் வாரிக் குவித்தது.

    திரையரங்குகள் மூடப்பட்டன

    திரையரங்குகள் மூடப்பட்டன

    எனினும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட அசாதாரண கொரானா பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து திரைப்படங்களும் நிறுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன.

    ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

    ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

    அதில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓ மை கடவுளே, தாராள பிரபு, ஆங்கிலத் திரைப்படமான 1977 உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இவை திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க திரையரங்குகள் திடீரென மூடப்பட்டதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர்.

    நவம்பர் 10ஆம் தேதி ரீ ரிலீஸ்

    நவம்பர் 10ஆம் தேதி ரீ ரிலீஸ்

    இந்நிலையில் நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகளில் தகுந்த பாதுகாப்புகளுடன் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தீபாவளிக்கு புது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அதேசமயம் ஏற்கனவே பாதியிலேயே திரையரங்குகளில் நிறுத்தப்பட்ட திரைப்படங்களான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தாராள பிரபு, ஓ மை கடவுளே மற்றும் 1977 திரைப்படங்கள் வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    English summary
    Kannum Kannum Kollaiyadithal to be re released after corona
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X