தனுஷின் இட்லி கடை காலி.. தமிழ்நாட்டிலும் காந்தாரா தான் டாப்.. தீபாவளி ரிலீஸ் படங்கள் கலக்குமா?

சென்னை: தனுஷின் இட்லி கடை திரைப்படம் முதல் வாரத்தில் காந்தாரா சாப்டர் 1 படத்தை விட அதிகளவில் தமிழ்நாட்டில் வசூல் செய்திருந்தது. மற்ற மாநிலங்களில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய காந்தாரா சாப்டர் 1 கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து தமிழ்நாட்டிலும் நல்ல வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.

ஆயுத பூஜை, விஜய தசமி என தசரா பண்டிகையை குறி வைத்து வெளியான காந்தாரா சாப்டர் 1 மற்றும் இட்லி கடை உள்ளிட்ட 2 படங்களுமே தமிழ்நாட்டில் அதிகபட்சம் 92 கோடி ரூபாய் வசூலை தமிழ் சினிமா ரசிகர்களிடம் இருந்து வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kantara Chapter 1 beats Dhanush s Idli Kadai in Tamil Nadu
Photo Credit:

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் உலகம் முழுவதும் 700 கோடி எனும் இமாலய வசூல் சாதனையை நிகழ்த்திய நிலையில், தீபாவளி விடுமுறையுடன் அந்த படம் 800 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2வது இடத்தில் காந்தாரா சாப்டர் 1: இந்தியாவில் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே விக்கி கவுஷலின் சாவ்வா திரைப்படம் தான் 804 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டி முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டுமே அந்த படம் 600 கோடி வசூலை அள்ளியுள்ளது. இந்நிலையில், அந்த படத்தைத் தொடர்ந்து அதிக வசூலில் இருந்த சையாரா மற்றும் ரஜினிகாந்தின் கூலி படங்களின் வசூலை பின்னுக்குத் தள்ளி 700 கோடி வசூலுடன் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 2வது இடத்தில் உள்ளது. தீபாவளி விடுமுறை 4 நாட்கள் உள்ள நிலையில், காந்தாரா படம் 800 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளி முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இட்லி கடையை முந்திய காந்தாரா: காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் மற்ற மாநிலங்களில் வெற்றி கொடி நாட்டிய நிலையில், தற்போது தசரா விடுமுறை ரேஸில் ஒரு நாள் தாமதமாக வந்தாலும் தற்போது தனுஷின் இட்லி கடை படத்தின் வசூலை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளதாக சினி டிராக் தகவல் தெரிவித்துள்ளது. இன்பன் உதயநிதி வெளியிட்ட முதல் படம் தமிழ்நாட்டிலேயே பெரிய வெற்றியை பெறவில்லையே என ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். 12 நாட்களில் இட்லி கடை 44.25 கோடி வசூல் செய்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 11 நாட்களில் 47.5 கோடி வசூலை தமிழ்நாட்டில் அள்ளியுள்ளது.

Kantara Chapter 1 beats Dhanush s Idli Kadai in Tamil Nadu

தீபாவளி ரிலீஸ் கைகொடுக்குமா?: இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இளம் நடிகர்களான பிரதீப் ரங்கநாதன், ஹரிஷ் கல்யாண் மற்றும் துருவ் விக்ரம் உள்ளிட்டோர் படங்கள் தான் வெளியாகின்றன. டியூட், டீசல் மற்றும் பைசன் என அனைத்து படங்களும் ஆங்கில தலைப்புகளுடன் வெளியாகவுள்ள நிலையில், தீபாவளிக்கு பாக்ஸ் ஆபிஸ் கல்லா கட்டுமா? இல்லையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X