Kantara Chapter 1 Box Office: உலகளவில் காந்தாரா சாப்டர் 1 வசூல் இத்தனை கோடியா?.. 1000 கோடி கன்ஃபார்ம்?
சென்னை: இந்தியாவில் முதல் நாளிலேயே மிகப்பெரிய ஓபனிங்கை அள்ளியிருக்கிறது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படம். ஒட்டுமொத்த விமர்சகர்களும் படத்தை புகழ்ந்து தள்ளி வரும் நிலையில், மக்கள் இந்த படத்துக்கு அமோக வரவேற்பை கொடுத்து வருகின்றனர். ஒரே நாளில் 1 மில்லியன் டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் புக் ஆகி சாதனை படைத்துள்ளது.
புஷ்பா 2, கல்கி படங்களை தொடர்ந்து இந்த காந்தாரா சாப்டர் 1 படம் தான் முதல் நாளிலேயே டிக்கெட் புக்கிங் சாதனை படைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா படத்தை பார்த்துவிட்டு, இதுவரை இந்தியாவில் இப்படியொரு படத்தை பார்க்கவே இல்லை, ரிஷப் ஷெட்டி ஹீரோவாகவும் இயக்குநராகவும் தான் யார் என்பதை உலகத்துக்கே காட்டிவிட்டார் என பாராட்டியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகம் மட்டுமின்றி சர்வதேச அளவில் காந்தாரா சாப்டர் 1 படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், முதல் நாளில் உலகளவில் இந்த படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம் வாங்க..
முதல் நாள் வசூல் இந்தியளவில்: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 படத்தை ஹோம்பாலே நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா நடிகர்கள், மல்டி ஸ்டாரர்களை போட்டு பணத்தை சம்பளத்துக்கே கரியாக்காமல் படத்தின் மேக்கிங்கிற்காக ரிஷப் ஷெட்டி போட்டுள்ளது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. சிஜி டீமின் வேலைப்பாடு 125 கோடி பட்ஜெட்டில் இந்த அளவுக்கு ஒரு ஹாலிவுட் தரத்தை கொடுக்க முடியும் என்றால் 300 கோடி, 500 கோடி பட்ஜெட் படங்களில் இந்திய இயக்குநர்கள் என்ன மாதிரியான படங்களை கொடுக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முதல் நாள் இந்தியாவில் முதல் நாள் இரவு ப்ரீமியருடன் சேர்த்து அதிகபட்சமாக 60 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சாக்னிக் வெப்சைட் தகவல் வெளியிட்டுள்ளது.
உலகளவில் எத்தனை கோடி: காந்தாரா சாப்டர் 1 படத்தை ரிஷப் ஷெட்டி உலகளவில் பெரிதாக ப்ரோமோட் செய்யவில்லை. படம் வெளியான பின்னர், தானாகவே பிக்கப் ஆகிவிடும் என நினைத்துவிட்டார் போல தெரிகிறது. ஓவர்சீஸ்களில் முதல் நாள் வசூல் வெறும் 20 கோடி அளவே வந்திருப்பதாகவும் ஒட்டுமொத்தமாக 80 கோடி வசூலை காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் முதல் நாளில் ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர்.
1000 கோடி வசூல் வருமா?: 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் முதல் நாளில் சுமாரான வசூலை தான் ஈட்டியது. ஆனால், அந்த படம் பிக்கப் ஆன பிறகு 400 கோடி வசூலை கடந்து பேயாட்டம் ஆடியது. முதல் நாளே காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 80 கோடி வசூலை ஈட்டியுள்ள நிலையில், 5000க்கும் அதிகமான ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இந்த படம் ஓடுவதாக ரிஷப் ஷெட்டி நன்றி ட்வீட் போட்டுள்ளார். இந்த ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை வாரத்தில் இதே வேகத்தில் படம் ஓடும் என்றே தெரிகிறது. முதல் வார முடிவில் அதிகபட்சமாக 500 கோடி வசூலை ஈட்டினால், கண்டிப்பாக 1000 கோடி வசூல் தீபாவளி வாரத்திற்குள் சாத்தியமாகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











