Kantara Chapter 1 Box Office: 1000 கோடி வசூல் வர வாய்ப்பே இல்லை.. காந்தாரா சாப்டர் 1 வசூல் எவ்வளவு?
சென்னை: வார நாட்களிலும் 30 முதல் 25 கோடி வசூலை தினமும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் அள்ளி வருகிறது. காந்தாரா முதல் பாகத்தின் வசூலை முறியடித்து மிகப்பெரிய சாதனையை உலகளவில் படைத்துள்ளது. ரஜினிகாந்தின் கூலி படத்தின் வசூல் சாதனையை காந்தாரா சாப்டர் 1 முறியடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், 1000 கோடி வசூலை காந்தாரா சாப்டர் 1 படம் வசூல் செய்யாது என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கன்னட திரையுலகில் வெளியான கேஜிஎஃப் முதல் பாகம் 238 கோடி வசூல் செய்த நிலையில், அதன் 2ம் பாகமான கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகளவில் அதிகபட்சமாக 1215 கோடி வசூல் செய்து உச்சத்தில் உள்ளது.

காந்தாரா முதல் பாகம் 408 கோடி வசூல் செய்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 426 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் 500 கோடி வசூல்: இந்த ஆண்டு இந்தியாவில் வெளியான படங்களில் விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா நடித்த சாவ்வா திரைப்படம் அதிகபட்சமாக 800 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதன் பின்னர், காதல் படமாக வெளியான சையாரா திரைப்படம் 570 கோடி வசூலை ஈட்டியது. ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் அதிகபட்சமாக உலகளவில் 518 கோடி வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இந்த வெள்ளிக்கிழமைக்குள் 500 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1000 கோடி வாய்ப்பில்லை: காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், ஓவர்சீஸில் இந்த படத்தை சரியாக ப்ரோமோட் செய்ய ஹோம்பாலே நிறுவனம் தவறிவிட்டதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். அதன் காரணமாக 1000 கோடி ரூபாய் வசூல் டவுட்டு தான் என்கின்றனர்.
700 கோடி பிளஸ்: இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காந்தாரா சாப்டர் 1 தலா 50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டினால், பெரிய பாக்ஸ் ஆபீஸ் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கின்றனர். அதிகபட்சமாக காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 700 கோடி வரை வசூல் ஈட்டும் என தெரிகிறது. சாவ்வா படத்தின் வசூலை முந்தினால், இந்த ஆண்டின் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் என்றும் அப்படி இல்லையென்றால் 2வது இடத்தில் காந்தாரா சாப்டர் 1 இருக்கும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











