Kantara Day 6 Box Office: 400 கோடிகள்.. கூலியை தூக்கிச் சாப்பிட்ட காந்தாரா.. வசூலில் பட்டையக் கிளப்புதே!

சென்னை: ரிஷப் ஷெட்டி கதை, திரைக்கதை எழுதி, இயக்கி நடித்துள்ள படம் காந்தாரா சாப்டர் 1. இந்த படம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி உடன் ருக்மினி வசந்த் மற்றும் ஜெய்ராம் என பலரும் நடித்துள்ளார்கள். படத்தின் கதை, அதற்கு ஏற்ற திரைக்கதை என மொத்தமாகவே படம் ரசிகர்களுக்கு திருப்தி அளித்துள்ளதால், படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் 6 நாள் வசூல் குறித்து காணலாம்.

காந்தாரா படமே மிகப்பெரிய வெற்றியை அடைந்ததால், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாகவே ஒரு படம் வணிகரீதியாக வெற்றி பெறுகிறது என்றால், அது படம் வார இறுதி நாட்களை கடந்து வார நாட்களிலும் வசூல் குவிக்க வேண்டும். இப்படி இருக்கும்போதுதான் அந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை ஈட்டும்.

Kantara Chapter 1 Day 6 Box Office Collection Cross 400 Crores In World Wide
Photo Credit:

இந்த வரிசையில்தான் தற்போது காந்தாரா சாப்டர் 1 படமும் இணைந்துள்ளது. அதாவது படம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வெளியானது. நான்கு நாட்கள் விடுமுறை தினத்தை ஒட்டி படம் வெளியாகி இருந்தாலும் இந்தப் படத்தில் வரும் வன தெய்வமும் அதன் வழிபாட்டு முறையும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதனாலே படத்திற்கு பெரிய வெற்றி கிடைத்தது என்று கூறலாம்.

பாராட்டு: அதேபோல் இந்த படத்தில் அந்த வன தெய்வத்தின் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கி உள்ளார் ரிஷப் ஷெட்டி. படம் பார்த்த ரசிகர்கள் படத்தின் சி.ஜி வேலைகளை பாராட்டி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், படத்தின் திரைக்கதையே மிகவும் நேர்த்தியாகவும் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வகையிலும் உருவாக்கி படத்தை எடுத்துள்ளார்கள்.

Kantara Chapter 1 Day 6 Box Office Collection Cross 400 Crores In World Wide
Photo Credit:

400 கோடிகள்: படம் இதுவரை இந்தியாவில் மட்டும் முதல் 6 நாட்களில் ரூபாய் 290.25 கோடிகள் வசூலித்துள்ளதாக சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. அதேபோல் படத்தின் வெளிநாடு வசூல்களை கணக்கில் கொண்டால் ரூபாய் 400 கோடிகளுக்கு மேல் வசூலித்திருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் 6வது நாளில் மட்டும் இந்தியாவில் ரூபாய் 33.5 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பு: படத்தின் இந்த வசூல் கணக்கை பார்க்கும் போது கூடிய விரைவில் கூலி படத்தின் மொத்த வசூலை வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், படத்தின் வசூல் வார நாட்களிலும் ரூபாய் 30 கோடிகளுக்கும் குறையாமல் இருப்பதால் இந்த படம் தீபாவளிக்குள் ரூபாய் 600 முதல் 700 கோடிகளை வசூல் செய்து விடும் என்று கூறப்படுகிறது. மேலும் சிலர் படம் கட்டாயம் 1000 கோடிகள் வசூல் குவிக்கும் என்றும் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X