காந்தாரா சாப்டர் 1.. ரூ 1500 கோடி வசூலுக்கு பக்கா பிளான்.. புது டிரைலர் எப்படி இருக்கு?
சென்னை: ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் இந்தியாவில் பல்வேறு புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது.
'காந்தாரா சாப்டர் 1' படத்தின் ஆங்கிலப் பதிப்பு அக்டோபர் 31 முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இதேபோல், ஸ்பானிஷ் மொழியிலும் திரைப்படம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. உலகின் இரண்டு முக்கிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இந்தப் படத்தை திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த முயற்சி ஹோம்பாளே ஃபிலிம்ஸுக்கு வெற்றி அளித்தால், அது மற்ற மொழித் திரைப்படங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும். மேலும், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறும் முதல் கன்னடத் திரைப்படம் என்ற பெருமையையும் 'காந்தாரா சாப்டர் 1' பெறும்.
இப்படம் கன்னடத் திரையுலகத்தின் போக்கையே மாற்றும் அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது. 'காந்தாரா சாப்டர் 1' ஒருபுறம் ஓடிடி தளங்களில் வெளியாக இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், மறுபுறம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸிலும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில், 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் ஸ்பானிஷ் மொழி டிரெய்லர் வெளியாகி உள்ளது. நெட்டிசன்களின் ரியாக்ஷன் என்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

ரிஷப் ஷெட்டி படமான 'காந்தாரா 1', இதுவரை பான் இந்தியா அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தியாவின் ஐந்து மொழிகளில் வெளியாகி, வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது. தற்போது, உலகளவில் மிகவும் பிரபலமான இரண்டு முக்கிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது, அவற்றில் ஒன்று ஸ்பானிஷ். ஸ்பெயின் திரைப்படத் தயாரிப்பாளர்கள் திரைப்படத் தயாரிப்பில் முன்னணியில் உள்ளனர். அங்குள்ள மக்கள் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார்கள். ஒரு கன்னடப் படத்தை அவர்கள் விரும்புவார்களா என்ற ஆர்வம் தற்போது எழுந்துள்ளது.
எதிர்பார்ப்பு: தற்போது டிரெய்லர் வெளியாகிவிட்ட நிலையில், அதற்கான எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. ரிஷப் ஷெட்டி மற்றும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் ஸ்பானிஷ் டிரெய்லர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் சுமார் 850 கோடிகளுக்கு மேல் வசூலித்துவிட்டது. இப்படி இருக்கும்போது, ஸ்பானிஷிலும் ஆங்கிலத்திலும் படம் ஓரளவுக்கு பிக்-அப் ஆனாலே படம் அசால்ட்டாக 1200 கோடிகளைக் கடந்துவிடும் என்று கூறப்படுகிறது. படத்திற்கு எந்த அளவுக்கு மார்க்கெட்டிங் செய்யப்போகிறார்கள் என்பதும் இதில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications











