இட்லி கடை Vs Kantara Chapter 1 Box Office - கதறும் தனுஷ்?.. அய்யய்யோ நிலைமை இப்படி ஆகிடுச்சா?
சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இட்லி கடை திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. அதேபோல் நேற்று ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியாகி அதுவும் பலரால் ரசிக்கப்படுகிறது. பாக்ஸ் ஆஃபிஸிலும் இட்லி கடையைவிடவும் வேகமாக முன்னேறுகிறது படம்.
இயக்கத்தில் அதீத கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கும் தனுஷ் இப்போது இட்லி கடை படத்தை இயக்கியிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கியிருந்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், ராயன் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்திருந்தன. எனவே இப்படத்தில் நடிகராகவும், இயக்குநராகவும் ஒரேநேரத்தில் வெல்ல வேண்டிய நிலைமை அவருக்கு உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ரெஸ்பான்ஸ்: படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமையும் என அவரது ரசிகர்கள் நம்பியிருந்தார்கள். அதற்கேற்றபடிதான் படத்தின் மேக்கிங்கும் அமைந்திருந்தது. ஒரு இயக்குநராக தனுஷ் மிகச்சிறந்த படைப்பை கொடுத்திருக்கிறார் என்று கொண்டாடிவருகிறார்கள். அதேசமயம் அவர் சொல்ல வரும் கருத்து குல தொழிலுக்கு கொடி பிடிப்பது போன்று இருப்பதாக விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

வசூலிலும் சூப்பர்: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்தான். முதல் நாளில் உலகம் முழுவதும் 16 கோடி ரூபாய்வரை வசூலித்த இட்லி கடை இரண்டாவது நாளில் கிட்டத்தட்ட 28 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் அதன் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்திருந்த தனுஷ் ரசிகர்களுக்கு பெரிய இடி ஒன்று இறங்கியது.
என்ன இடி?: அதாவது கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காந்தாரா. அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர். அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை காந்தாரா சாப்டர் 1 என்ற பெயரில் உருவாக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இப்படத்தில் அவருடன் ருக்மிணி வசந்த் என பலர் நடித்திருக்கிறார்கள். இப்படமானது நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீஸானது.அந்தப் படத்துக்கு இட்லி கடையைவிடவும் சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
செம கூட்டம்: இட்லி கடை திரைப்படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் செய்த வசூலைவிடவும் முதல் நாளிலேயே பல மடங்கு அதிகம் வசூலித்திருக்கிறது அப்படம். உலகம் முழுவதும் காந்தாரா நேற்று 60 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்துக்கு முதல் நாளிலேயே முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களே வர தொடங்கியிருக்கின்றன. எனவே கண்டிப்பாக இனி வரும் நாட்களில் பாக்ஸ் ஆஃபிஸில் இட்லி கடையைவிடவும் காந்தாரா படம்தான் முன்னேறப்போகிறது எனவும் திரைத்துறையினர் சொல்ல தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











