இட்லி கடை சட்னியாகாம இருந்தா சரி.. ஒரே நாளில் 107 மில்லியன் வியூஸ் கடந்த காந்தாரா 2!
பெங்களூர்: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், ஒரே நாளில் 107 மில்லியன் டிஜிட்டல் வியூஸ் அள்ளியிருப்பதாக ஹோம்பாலே நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தாரா படத்தின் 2ம் பாகமான காந்தாரா சாப்டர் 1 படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் படம் 16 கோடியில் எடுக்கப்பட்டு 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில், காந்தாரா 2 படத்தின் பட்ஜெட் மட்டுமே 125 கோடி என சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு உழைப்பு படத்தில் கொட்டப்பட்டு இருப்பதாக டிரைலரை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். காந்தாரா படத்துடன் மோதும் தனுஷின் இட்லி கடை படத்துக்கு தேசிய அளவில் கடும் நெருக்கடி ஏற்படும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
சிவகார்த்திகேயன் முதல் ஹ்ரித்திக் ரோஷன் வரை: காந்தாரா சாப்டர் 1 படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அந்த டிரைலர் இதுவரை யூடியூபில் 8.2 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இட்லி கடை டிரைலர் 2 நாட்களில் அதிகப்படியாக 13 மில்லியன் வியூஸ் கடந்துள்ளது. தெலுங்கில் வெறும் 2 கோடி வியூஸ் தான் அள்ளியிருக்கிறது. காந்தாரா கன்னட படம் தமிழிலேயே 8.2 மில்லியன் வியூஸ் அள்ளியிருப்பது இட்லி கடை படத்துக்கு தமிழ்நாட்டிலும் பெரிய தலைவலியாக மாறும் என்கின்றனர். இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் வெளியிட்ட காந்தாரா சாப்டர் 1 டிரைலர் அதிகப்படியாக 25 மில்லியன் வியூஸ் அள்ளியிருக்கிறது.
107 மில்லியன் டிஜிட்டல் வியூஸ்: தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் யூடியூபில் வெளியான காந்தாரா சாப்டர் 1 டிரைலர் இதுவரை ஒட்டுமொத்தமாக 80 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மற்ற டிஜிட்டல் பார்வைகள் என சேர்ந்து ஒட்டுமொத்தமாக 107 மில்லியன் வியூஸை காந்தாரா சாப்டர் 1 அள்ளியிருப்பதாக ஹோம்பாலே நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இட்லி கடைக்கு போட்டி: காந்தாரா சாப்டர் 1 படத்துடன் தனுஷின் இட்லி கடை படம் மோதுவுள்ள நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்துக்கு தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இட்லி கடை படம் எதிர்பார்த்த வெற்றியை பெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இட்லி கடை படத்தில் கிராமத்து டச் இருப்பதால் கண்டிப்பாக தமிழ்நாடு முழுவதும் அந்த படம் வசூல் வேட்டை நடத்தும் என தெரிகிறது. அந்த பல்ஸை புரிந்துக் கொண்டு தான் தனுஷ் சென்னையில் ஆடியோ லாஞ்சை நடத்திவிட்டு கோவையில் டிரைலரை வெளியிட்டார். மேலும், மதுரை மற்றும் திருச்சியிலும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை வைத்து பக்கா ப்ரோமோஷனில் இறங்கியுள்ளார் என்கின்றனர். இந்த ஆண்டு வெளியான மாமன், தலைவன் தலைவி படங்களை தொடர்ந்து இட்லி கடை படமும் காந்தாரா படத்தை தாண்டி வெற்றி பெறும் என கோலிவுட் நம்புகிறது.


Click it and Unblock the Notifications











