Kantara Chapter1: ஒப்பேத்தி இருக்கிறார் ரிஷப் ஷெட்டி.. காந்தாரா சாப்டர் 1 ப்ளூ சட்டைமாறன் விமர்சனம்!
சென்னை: 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற படம் 'காந்தாரா'. ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலக அளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இதைத்தொடர்ந்து, படத்தின் ப்ரீக்வல் அதாவது இதன் முந்தைய பாகமாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டியே இயக்கி நடித்துள்ளனர். இப்படம் நேற்று தியேட்டரில் வெளியான நிலையில்,ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்க்கலாம்.
காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் கதை என்னவென்றால் ஈஸ்வரா பூந்தோட்டம் என்ற பகுதியில் அறிய வகையான மிளகு, ஏலக்காய், தேன், பட்டை போன்றவை கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் தெய்வ சக்தியும் இருப்பதால், அந்த இடத்தை ஆட்டையை போட்டு விட வேண்டுமென இரண்டு குழுக்கள் நிலைக்கின்றன. அது மட்டுமல்லாமல் ராஜா ஒருவரும் நினைக்கிறார். இதனால், நடுக்கவும் போரில் காந்தாரா மக்களை அந்த தெய்வம் காப்பாற்றுகிறதா... இல்லையா.. என்பதுதான் இந்த திரைப்படத்தில் கதை.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: காந்தாரா முதல் பாகத்தில், ஒவ்வொரு சம்பவமும் உண்மைக்கு மிக நெருக்கமாக எடுத்து இருப்பார்கள். அதுவே அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. ஆனால், காந்ததா சாப்டர் 1 திரைப்படத்தை பொருத்தவரை ஒரு ஃபேண்டஸி திரைப்படமாக எடுக்கிறேன் என்று முழுக்க முழுக்க செயற்கை தனமாக ஒரு படத்தை எடுத்து வைத்து இருக்கிறார்கள். படத்தில் புலி, தேவங்கு, குதிரை வருகின்றன. அந்த காட்சியை திரையில் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. ஆனால், ஏன் வருகிறது என்று தான் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் படத்தின் முதல் பாதி முழுவதுமே கதை எதை நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை. அதை கண்டுபிடிப்பதற்கே மிகவும் சிரமமாக இருந்தது.
ஒப்பேத்தி இருக்கிறார் ரிஷப் ஷெட்டி: படத்தின் இரண்டாவது பாதியில் தான் மிகப்பெரிய ட்விஸ்டே வருகிறது. அதன் பிறகு தான் படமே விறுவிறுப்பாகிறது. காந்தாரா படத்தின் கிளைமாக்ஸில் ரிஷப் ஷெட்டிக்கு சாமி வந்து ஆடுவது கடவுள் பக்தி இருப்பவர்கள், கடவுள் பக்தி இல்லாதவர்கள் என அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து விடும். அதேபோலத்தான் காந்தாரா சாப்ட்வேர் 1 படத்தில் ட்விஸ்ட் வைக்கிறார்கள். ஆனால், இந்த திரைப்படத்திலும் அதே இருந்து வாராகி அம்மன் பாட்டைப் போட் ஒப்பேத்தி இருக்கிறார். கடவுள் பக்தி கொண்டவர்கள் இந்த திரைப்படத்தை ரசித்துப் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சாதாரண மக்கள் இந்த படத்தை கொண்டாடுவது சந்தேகம்தான் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











