Kantara Chapter 1 Premiere Box Office: நார்த் அமெரிக்காவிலேயே 4 கோடி.. காந்தாரா சாப்டர் 1 ப்ரீமியர் வசூல்!
சென்னை: ஹோம்பாலே தயாரிப்பு நிறுவனம் கேஜிஎஃப் படத்தைத் தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 படத்தின் மூலம் மேலும், கல்லா கட்ட காத்திருக்கிறது. சமீபத்தில், வெளியான மகாவதார் நரசிம்மா திரைப்படமே 300 கோடி வசூல் ஈட்டிய நிலையில், காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2022ம் ஆண்டு வெறும் 16 கோடி பட்ஜெட்டில் உருவான காந்தாரா திரைப்படம் இந்தியாவில் மட்டுமே 310 கோடி வசூலை ஈட்டியது. அதிலும், இந்தி பெல்ட்டில் அதிகபட்சமாக 80 கோடி வசூலை அதுவும் 2 வாரங்கள் தாமதமாக வெளியான நிலையில், ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தது.

இந்நிலையில், 125 கோடி பட்ஜெட்டில் பட்ஜெட்டை மொத்தமே படத்துக்காக செலவு செய்து உருவாக்கி இப்படியொரு பிரம்மாண்ட படைப்பை ரிஷப் ஷெட்டி கொடுத்துள்ள நிலையில், ப்ரீமியர் ஷோவிலேயே மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நார்த் அமெரிக்காவில் 4 கோடி: வட அமெரிக்காவில் நேற்று வெளியிடப்பட்ட காந்தாரா சாப்டர் 1 படத்தின் ப்ரீமியர் ஷோ அதிகபட்சமாக 450K அமெரிக்க டாலர்களை வசூல் செய்துள்ளதாக ஓவர்சீஸ் விநியோகஸ்தரான பிரத்யங்கரா சினிமாஸ் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய் வசூலை வட அமெரிக்காவில் மட்டுமே காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் முதல் நாளில் வசூல் ஈட்டியுள்ளது.
காந்தாரா ப்ரீமியர் வசூல்: கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியாவில் நேற்று இரவே காந்தாரா சாப்டர் 1 ப்ரீமியர் காட்சிகள் போடப்பட்ட நிலையில், சுமார் 10 கோடி அளவுக்கு வசூல் வந்திருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக உலகளவில் ப்ரீமியர் ஷோவில் மட்டுமே காந்தாரா 15 கோடி வசூலை அள்ளியுள்ளதாக கூறுகின்றனர்.
முதல் நாள் வசூல்: முதல் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே 25 கோடி ரூபாய் வசூலை இந்தியளவில் கடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், முதல் நாள் முடிவில் இந்தியாவில் மட்டும் காந்தாரா சாப்டர் 1 வசூல் அதிகபட்சமாக 40 முதல் 50 கோடி வரும் என எதிர்பார்கக்ப்படுகிறது. காந்தாரா முதல் பாகத்தை விட மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ள நிலையில், இந்த தசரா பண்டிகை விடுமுறையை பான் இந்தியா அளவில் ஒட்டுமொத்தமாக காந்தாராவின் காளி தேவி கிளைமேக்ஸ் கவர்ந்து விட்டால் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸை ஈட்டி கர்நாடகா திரையுலகுக்கு அடுத்த மெகா பிளாக்பஸ்டர் படமாக இது மாறும் என்பதில் எந்தவொரு டவுட்டும் இல்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











