Kantara Chapter 1 Public Review: படம் முழுக்க கூஸ்பம்ப்ஸ்.. காந்தாரா சாப்டர் 1 பப்ளிக் விமர்சனம்!

சென்னை: காந்தாரா படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. இப்படி இருக்கும்போது காந்தாரா படத்தின் அடுத்த பாகம் வருகிறது என்றும் அது படத்தின் ப்ரீ குவல் என்றும் தகவல்கள் வெளியானதும் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் படம் இன்று அதாவது அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தை ப்ரீமியர் காட்சியில் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது விமர்சனத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ரசிகை ஒருவர் கூறும்போது, " படம் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை மிகவும் நன்றாக இருந்தது. இடைவேளை காட்சி கிளைமாக்ஸ் காட்சி என அனைத்தும் சூப்பர். படத்தின் தீம் மியூசிக் வரும் இடங்களில் எல்லாம் புல்லரிக்க வைக்கிறது. எல்லா காட்சிகளும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூப்பர். படத்தின் மூன்றாம் பாகம் வந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டார்கள்" என்றார்.

மற்றொரு ரசிகை கூறும்போது, " படம் ரொம்பவும் நன்றாக இருந்தது. நடிகர் பிரமாதமாக நடித்திருந்தார். படத்தின் சி.ஜி. காட்சிகள் மிகவும் நன்றாக இருந்தது. நந்தி போன்ற காட்சி இருந்தது. அது நன்றாக இருந்தது. படம் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை எங்கேயும் போர் அடிக்கவில்லை. எல்லா இடத்திலும் நன்றாக இருந்தது" என்று தெரிவித்தார்.

மூன்றாம் பாகம்: இன்னொரு ரசிகர் கூறும்போது, " படத்தை மொத்தமாகவே வேறு ஒரு காட்டுக்குள் எடுத்து நம்மை அதில் மூழ்கடித்து விட்டார்கள். படம் சிறப்பாக உள்ளது. படத்தில் பல புல்லரிக்க வைக்கும் காட்சிகள் உள்ளது. மற்ற படங்களை ஓட்டுவதைப் போல இந்த படத்தையும் ஓட்ட வேண்டாம். கட்டாயம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். ரிஷப் ஷெட்டியின் நடிப்பு நன்றாக உள்ளது. மூன்றாவது பாகத்திற்கும் லீட் கொடுத்துள்ளார்கள். கதையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே இருந்த கதையை கொஞ்சம் ரீ மாடல் செய்ததைப் போல இருந்தது" என்று விமர்சித்துள்ளார்.

Kantara Chapter 1 Public Review Tamil Audience Celebrates Making And Whole Film

புல்லரிக்க வைக்கும் காட்சிகள்: மற்றொரு ரசிகர் கூறும்போது, " படத்தின் இசை நன்றாக உள்ளது. கடைசி 20 நிமிடங்கள் முழுக்க முழுக்க புல்லரிக்க வைக்கும் காட்சிகள்தான். படம் முழுக்க பிரம்மாண்டமான காட்சிகள் உள்ளன. இரண்டு மூன்று முறை கூட பார்க்கலாம் என்று கூறும் அளவுக்கான படம். படக்குழு மிகவும் கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கி உள்ளார்கள் என்பது படத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. படத்தின் சி.ஜி. காட்சிகளை சி.ஜி. காட்சிகள் என்று கண்டுபிடிக்க முடியாது என்று கூறும் அளவுக்கு உள்ளது.

பாக்ஸ் ஆபீஸ்: மற்றொரு ரசிகர் கூறும்போது, " முதல் பாகம் நன்றாக உள்ளது. அதனால் இந்த படமும் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வந்தேன். மிரட்டி விட்டுள்ளார்கள். முதல் பாதி ஏதோ மாதிரி போனது போலத் தெரிந்தது. ஆனால் இரண்டாம் பாதி மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறது. முதல் பாகம் பார்த்த ரசிகர்களுக்கு இரண்டாவது பாகம் நன்றாகவே கனெக்ட் ஆகும்" என்று தெரிவித்துள்ளார். படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே இட்லி கடை படம் வெளியாகி உள்ளது என்பதால் பாக்ஸ் ஆபிஸில் இரண்டு படங்களுக்கும் பெரிய வசூலை குவிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X