Kantara Chapter 1 Trailer: காந்தாரா சாப்டர் 1 டிரைலர் எப்படி இருக்கு?.. தனுஷின் இட்லி கடைக்கு ஆபத்தா?
சென்னை: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 டிரைலர் வெளியானது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி காந்தாரா படம் வெளியாகி கேஜிஎஃப் படத்தைத் தொடர்ந்து கன்னட சினிமாவில் இருந்து பான் இந்தியா படத்தை தொடர்ந்து கொடுக்க முடியும் என்பதை நிரூபித்து 400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இந்நிலையில், 125 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள காந்தாரா சாப்டர் 1 படம் வரும் அக்டோபர் 2ம் தேதி ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. தனுஷின் இட்லி கடை படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அடுத்த வாரம் 2 படங்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் பாக்ஸ் ஆபீஸில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தாரா படத்தை போலவே அதன் ப்ரீக்வெல் படமான காந்தாரா சாப்டர் 1 படம் அதிர்வலைகளை ஏற்படுத்துமா? டிரைலர் எப்படி இருக்கு? போன்ற விஷயங்களை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
காந்தாரா சாப்டர் 1 டிரைலர் ரிலீஸ்: ஹோம்பலே நிறுவனம் தயாரிப்பில் விஜய் கிர்கந்தர் திரைக்கதையில் ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரைலர் வெளியானது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டிக்கு ஜோடியாக ஏஸ், மதராஸி படங்களில் நடித்த ருக்மணி வசந்த் நடித்துள்ளார். ஜெயராம், குல்ஷன் தேவய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரமாண்டமாக காந்தாரா சாப்டர் 1 வெளியாகிறது.

காந்தாரா சாப்டர் 1 டிரைலர் எப்படி இருக்கு?: காந்தாரா படத்தில் ஹோ.. ஹோ.. என கத்தும் சத்தம் கேட்டதுமே பேய் படத்தை பார்க்கும் திகில் அனுபவம் கிடைத்தது. காந்தாரா 2 படத்தில் சிவனின் கதையும் பழங்காலத்தில் காந்தாரா மக்கள் நடத்திய போராட்டம் என ராஜா காலத்து கதையாக பிரமாண்டமாக படம் உருவாகியிருப்பது டிரைலரில் தெரிகிறது. காந்தாரா படத்தை போலவே ஆக்ஷன், ரொமான்ஸ், திகில் என அனைத்துமே இந்த காந்தாரா சாப்டர் 1ல் உள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக கன்னட திரையுலகத்துக்கு காந்தாரா சாப்டர் 1 மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்வர பகவான்: இந்த இடத்துல எங்கப்பா ஏன் மறைந்தார் என முந்தைய பார்ட் லீடுடன் ட்ரைலர் தொடங்குகிறது. "எப்போதெல்லாம் அதர்மம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் ஈஸ்வர பகவான் தனது கணங்களை அனுப்பிக் கொண்டே இருப்பார் என ஆரம்பிக்கும் டிரைலர் இறுதியில் ஈஸ்வர கடவுள் இங்கே தான் இருக்கிறார் என ஒரு பாதாள குழியைக் காட்ட அங்கே ஈஸ்வரக் கடவுளாகவே ரிஷப் ஷெட்டி இருக்கும் காட்சிகள் எல்லாம் கூஸ்பம்ப்ஸ் கொடுக்கிறது. அரச குடும்பத்தைச் சேர்ந்த ருக்மணி வசந்தை ரிஷப் ஷெட்டி காதலிப்பதும் அதன் காரணமாக ஏற்படும் சிக்கல்கள் என ஏகப்பட்ட விஷயங்களும் போர்க் காட்சிகளும் இந்த டிரைலரில் உள்ள நிலையில், மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











