Don't Miss!
- News
முகாலய தோட்டம் பெயர் மாற்றம்! அப்பட்டமான மத அடிப்படைவாத செயல்! ஜவாஹிருல்லா சாடல்!
- Finance
Adani: கிரெடிட் சூசி எடுத்த முடிவு.. FPO ரத்து செய்ய என்ன காரணம்..?
- Lifestyle
பிப்ரவரியில் நிகழும் 3 கிரக மாற்றங்களால், இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
- Technology
கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய Motorola போன்: அறிமுக தேதி இதுதான்.!
- Automobiles
போறபோக்க பாத்தா மாருதி, டாடா எல்லாம் நம்ம ஆளு பின்னாடிதான் நிக்கணும் போலிருக்கே! தொடர் வெற்றியில் மஹிந்திரா!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ராஷ்மிகா மந்தனா உடன் நடிக்க மாட்டேன்.. அதிரடியாக சொன்ன காந்தாரா ஹீரோ.. வலுக்கும் எதிர்ப்பு!
பெங்களூரு: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அணுகுமுறையால் கன்னட திரையுலகமே அவர் மீது உச்சகட்ட கோபமடைந்துள்ளது. காந்தாரா பட நடிகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராஷ்மிகா மந்தனா உடன் நடிக்க மாட்டேன் என்பதை மறைமுகமாக சொல்லி உள்ளது பேரதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
கன்னட திரையுலகத்தை சேர்ந்த பல தயாரிப்பாளர்கள் நடிகை ராஷ்மிகா மந்தனாவை இனிமேல் தங்கள் படங்களில் நடிக்க வைக்கப் போவதில்லை என்கிற நிலைக்கே வந்து விட்டதாக பரபரப்பு கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் பிற மொழி படங்களான வாரிசு, புஷ்பா 2 படங்களுக்கும் கர்நாடகாவில் தடை விதிக்கப் போவதாக அதிரடி பேச்சுக்கள் வெடித்துள்ளன.
நடிகையுடன் வெளிநாட்டில் டேரா போட்ட நாகசைதன்யா..சமந்தாவை நினைத்து புலம்பும் ஃபேன்ஸ்!

கன்னடத்தில் அறிமுகம்
கன்னடத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீத கோவிந்தம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், டாப் ஹீரோயினாக மாறினார். அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் அவரை பாலிவுட் வரை கொண்டு சென்ற நிலையில், இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகையாக மாறி உள்ளார் ராஷ்மிகா மந்தனா.

வாரிசு ஹீரோயின்
கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள வாரிசு படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்தியில் அமிதாப் பச்சன் உடன் குட் பை படத்தில் நடித்திருந்தார். மேலும், சித்தார்த் மல்கோத்ராவின் மிஷன் மஜ்னு படத்திலும் இவர் தான் ஹீரோயின்.

என்ன பிரச்சனை
ரக்ஷித் ஷெட்டியின் கிரிக் பார்ட்டி மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கும் ரக்ஷித் ஷெட்டிக்கும் காதல் ஏற்பட்டு திருமண ஏற்பாடுகள் வரை சென்று நின்று போனது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டியின் தயாரிப்பு நிறுவனமான ரக்ஷித் ஷெட்டியின் பரம்வா ஸ்டூடியோஸின் பெயரை சொல்லாமல் தட்டிக் கழித்தார். மேலும், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் தான் சிறந்து விளங்குவதை மட்டுமே பெருமையாக பேசிய நிலையில், ராஷ்மிகா கன்னட திரையுலகை அவமதித்து விட்டார் என அவருக்கு எதிராக கன்னட திரையுலகினர் திரும்பி உள்ளனர்.

நோ சொன்ன காந்தாரா ஹீரோ
காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய நிலையில், சமீபத்தில் அதன் ஹீரோவும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி பேட்டி ஒன்றில் பங்கெடுத்திருந்தார். அப்போது அடுத்து உங்கள் படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், சமந்தா மற்றும் சாய் பல்லவி இவர்களில் யாரை புக் செய்யப் போகிறீர்கள் என்கிற கேள்விக்கு உடனடியாக இவர்களில் யாரும் எனக்கு ஹீரோயினாக வேண்டாம் புதுமுக நடிகைகள் தான் என் கதைக்கு பொருத்தமாக இருப்பார்கள் என அதிரடியாக சொல்லி விட்டார்.

சமந்தா, சாய் பல்லவி
மேலும், தொடர்ந்து பேசிய ரிஷப் ஷெட்டி சமந்தா மற்றும் சாய் பல்லவி இருவருமே நேச்சுரலான நடிகைகள் என்று பாராட்டினார். சமந்தா உடல்நலம் சரியாகி சீக்கிரமே பழையபடி வர வேண்டும் என்று சொன்ன ரிஷப் ஷெட்டி ராஷ்மிகா பற்றி எதையுமே சொல்லவில்லை. நண்பர்களான ரக்ஷித் ஷெட்டியும் ரிஷப் ஷெட்டியும் பார்ட்னராக இருந்து தான் அந்த பரம்வா தயாரிப்பு நிறுவனத்தையே நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.