Don't Miss!
- News
கொரோனா ஊரடங்கு காலத்தில்.. படுஜோராக நடந்த 'காண்டம்'கள் விற்பனை.. முதலிடம் எந்த மாநிலம் தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Automobiles
சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல.. ரொம்ப கம்மி!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நிஜத்தில் ஓர் ‘காந்தாரா‘...குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்திய அனுஷ்கா ஷெட்டி!
பெங்களூர் : நடிகை அனுஷ்கா ஷெட்டி மங்களூரில் நடந்த 'பூத கோலா' விழாவில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.
கே.ஜி.எஃப் படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் 'காந்தாரா'. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கன்னடத்தில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் டப் செய்யப்பட்டும் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. படத்தைப்பார்த்த அனைவரும் ரிஷப் ஷெட்டியை பாராட்டினர்.
நான் ஒரு கன்னடர்..பாலிவுட்டில் நடிக்க மாட்டேன்.. காந்தாரா வெற்றியால் வரம்புமீறி பேசும் ரிஷப் ஷெட்டி!

காந்தாரா
1847ஆம் ஆண்டு ஓர் அரசருக்கு பணம், செல்வாக்கு என அனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லாததால் காட்டுக்கு செல்கிறார். அங்கு வசிக்கும் மக்களின் கடவுளைப் பார்த்து மனம் உருகி, அந்த தெய்வத்திற்காக பல ஏக்கர் நிலத்தை அந்த மக்களுக்கு எழுதி கொடுத்துவிடுகிறார். இதற்குப் பிறகு அந்த அரசனின் வழிவந்த ஒருவன், அந்த நிலங்களை மீட்க நினைக்க, அங்கிருந்த தெய்வம் அவனை கொன்றுவிடுகிறது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அரசர் வழிவந்த ஒருவன்அதே நிலத்தை மக்களிடமிருந்து பறிக்க நினைக்க தெய்வம் மீண்டும் தோன்றி நிலத்தை காப்பாற்றுகிறது.

வசூலைவாரிக்குவித்த படம்
திரையரங்கிற்கு அதிக ரசிகர்களை வரவைத்த திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது. கர்நாடக மாநிலம் மங்களுர், உடுப்பி போன்ற தெற்கு கடலோரப்பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் வழிபடக்கூடிய கிராம தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

குலதெய்வ வழிபாடு
காந்தாரா திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்கு முன்னோர்கள் வழிபாட்டுடன் இந்த திரைப்படத்தை ஒப்பிட்டுப்பார்த்து மக்கள் பூரிப்பு அடைந்தது தான், காரணம் என்று கூறப்படுகிறது. இதனால், இயல்பாகவே தங்கள் சொந்த ஊரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல்வைத்து வழிபாடு நடத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது.

பூத கோலா விழாவில் அனுஷ்கா
அந்தவகையில், நடிகை அனுஷ்கா ஷெட்டி மங்களூரில் நடந்த பூத கோலா விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பூத கோலா நிகழ்வு 'காந்தாரா' படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமாகியுள்ளது. காந்தாரா படத்தைப்பார்த்த அனுஷ்கா ஷெட்டி ரிஷப் ஷெட்டியை புகழ்ந்து பாராட்டி இருந்தார்.